பாம்பிடம் மூக்கில் கடி வாங்கிய பெண்! அப்பறம் என்னாச்சு? வைரலாகும் வீடியோ..

Viral Video Of A Snake Biting A Woman : ஒரு பெண், பாம்பை தனது முகத்திற்கு நேராக வைத்து வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார். அப்போது அந்த பாம்பு அவரது மூக்கை பதம் பார்த்திருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jan 24, 2025, 03:23 PM IST
  • பாம்பை வைத்து போஸ் கொடுத்த பெண்!
  • எகிறி வந்து மூக்கை கடித்த பாம்பு..
  • வைரலாகும் திக் திக் வீடியோ..
பாம்பிடம் மூக்கில் கடி வாங்கிய பெண்! அப்பறம் என்னாச்சு? வைரலாகும் வீடியோ.. title=

Viral Video Of A Snake Biting A Woman : வாழ்வில் என்ன நடந்தாலும் அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவது என்பது இப்போது மிகவும் சகஜமாகி விட்டது. ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து மகிழ்ச்சி அல்லது துக்க செய்திகளும் டிஜிட்டல் முறையிலேயே பரிமாறப்பட்டு விடுகின்றன. அப்படி, பாம்பிடம் மூக்கில் கடி வாங்கிய ஒரு பெண்ணின் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முதலில் ஒரு பெண் பாம்பை தனது முகத்திற்கு முன்னே வைத்து போஸ் கொடுக்கிறார். அந்த பெண் பயந்தாலும், அதனை வைத்து போஸ் கொடுக்க முயற்சி செய்கிறார். இதையடுத்து, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த பாம்பு பாய்ந்து அந்த பெண்ணின் மூக்கை பிடித்து விட்டது. அதன் பல்லும் பட்டுவிட்டது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Brut (@brutamerica)

அதிர்ஷ்டவசமாக, அந்த பாம்பு விஷமற்றதாக இருந்துள்ளது. இதனால், அந்த பெண் வெறும் காயங்களுடன் தப்பியிருக்கிறார். இஅல்லையென்றால் அந்த பாம்பு அப்பெண்ணின் மூக்கை பிடித்த வேகத்திற்கு அப்பெண் இந்நேரம் சொர்க்கத்தை சென்று சேர்ந்திருப்பார்.

இருப்பினும் அனைவருக்கும் ஒரு விஷயத்தை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்த பாம்பு தன்னை கடித்த பின்பு கூட, அப்பெண் அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை. ஆரம்பத்தில் அதிர்ச்சியானாலும் அதன் பின்னர் அமைதியாக அந்த பாம்பை கீழே விட்டுவிட்டு மூக்கில் கை வைத்தவாறு சென்றுவிட்டார். இவரது இந்த செயல் அனைவராலும் கவனிக்கப்பட்டிருக்கிறது. அந்த பெண் நடன கலைஞர் என்று கூறப்படுகிறது.

நெட்டிசன்கள் பலர் அந்த பெண்ணுக்காக பரிதாபப்படுகிறார்களோ இல்லையாே, பாம்பை நினைத்து நிறையவே வருத்தப்படுகின்றனர். அதை வேண்டுமென்றே கையில் பிடித்து கடுப்பேற்றியதால் இப்படி ஒரு நிலை அந்த பெண்ணுக்கு நேர்ந்ததாக சிலர் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | இறந்த ஆண் பாம்பை பார்த்து துடிதுடித்த பெண் பாம்பு - வைரல் வீடியோ

மேலும் படிக்க | 2 பாம்புகளை வாயில் கவ்விய ராஜ நாகம்... பார்த்தாலே பதறவைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News