Baking soda Health Tips | பேக்கிங் சோடாவைப் பற்றி பேசும்போது பலரும் சமையல் சோடாப்பை நினைத்து குழம்பிக் கொள்கிறார்கள். இரண்டும் வித்தியாசம் இருக்கிறது. சமையல் சோடாப்பை போலவே இதனையும் சமைக்க பயன்படுத்தலாம். இதிலும் ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. பொதுவாக பேக்கிங் சோடாவைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். சமையலறையில் இருக்கும் மஞ்சள் தூளில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை எல்லோரும் அறிந்து வைதிக்கிறார்கள். அது காயங்களை குணப்படுத்துவது முதல் உணவில் சத்துக்களை சேர்ப்பது வரை பல நன்மைகள் உள்ளன.
அதேபோல் கருப்பு மிளகு, இஞ்சி ஆகியவை சளியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கைகள் மற்றும் கால்களின் தசைகளை தளர்த்த உதவுகிறது. அதேபோல், தான் இந்த சோடாவும் பல பிரச்சினைகளை தீர்க்கும். இது சமைத்த உணவுகளை இலகுவாகவும், பஞ்சுபோன்றதாகவும், சுவையாகவும் மாற்ற உதவுகிறது. அதேபோல், பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
பேக்கிங் சோடாவின் நன்மைகள்
- உங்கள் வயிற்றில் எரியும் உணர்வு அல்லது வாயு இருந்தால், 1 கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை சோடாவை கலந்து குடிக்கவும். இது சில நிமிடங்களில் உங்களுக்கு நிவாரணம் தரும்.
- மஞ்சள் பற்களை பிரகாசமாக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். இது உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் அடுக்கை நீக்கி, உங்கள் பற்கள் முத்துக்களைப் போல பிரகாசிக்கத் தொடங்கும். இதற்கு, நீங்கள் ஒரு சிட்டிகை சமையல் சோடாவை கலந்து உங்கள் பற்களில் தேய்த்து சில நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவவும்
- பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து ஸ்க்ரப் செய்யலாம். இது சருமத்தை சுத்தப்படுத்தி, இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பளபளப்பாக்குகிறது.
- பேக்கிங் சோடாவை குளிர்சாதன பெட்டி, காலணிகள் அல்லது வேறு எந்த இடத்திலும் வைத்தீர்கள் என்றால் அந்த பகுதியில் இருந்து வரும் வாசனையை நீங்கும். அதே நேரத்தில், ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிப்பதும் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
- பூச்சிகள் வரும் இடங்களில் சமையல் சோடாவைத் தூவுவதன் மூலம் பூச்சிகள் மற்றும் சிலந்திகள் வராமல் தடுக்கலாம் தோல் பொருட்களை தண்ணீரில் பேக்கிங் சோடா கலந்து சுத்தம் செய்தால், அவை பளபளப்பாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்தவொரு புதிய தீர்வையும் பயன்படுத்துவதற்கு முன்பு, குறிப்பாக உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு, நிச்சயமாக ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பீட்ரூட் ஜூஸ் இவர்கள் குடிக்கவே கூடாது.. அப்படிக் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா!
மேலும் படிக்க | தினமும் வெள்ளை எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ