வியாழன் கிழமை இந்த நாளில் எளிதாக வீட்டில் நீங்கள் செய்ய வேண்டிய பழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் சிலவற்றை இங்குக் கொடுத்துள்ளோம். இவற்றின் அடிப்படையில் தொடர்ந்து வியாழக்கிழமை செய்து வாருங்கள். இப்படிச் செய்வதால் உண்டாகும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு கிழமைகளும் ஒவ்வொரு தெய்வங்களுக்குச் சிறப்பு நாளாக அமைகிறது. அந்த வகையில் வியாழக்கிழமையான இன்று நீங்கள் செய்ய வேண்டிய இந்த 7விஷயங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதனைத் தொடர்ந்து செய்வதால் உங்கள் வீட்டில் செல்வம், மகிழ்ச்சி மற்றும் அமைதி உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
வாழைமரம்: விஷ்ணு வாழை மரத்தில் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே நீங்கள் வியாழக்கிழமை வாழை மரத்தை வணங்கி வந்தால் உங்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும்.
மஞ்சள் மற்றும் தண்ணீர்: வியாழன் கிழமையில் நீங்கள் மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்த்துக் குளித்து வந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
வீட்டைத் துடைத்தல்: வியாழன் கிழமையில் ஒருபோதும் உங்கள் வீட்டைத் துடைக்காதீர்கள். இது வறுமை உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
வாழைப்பழம்: வியாழன் அன்று வாழைப்பழம் சாப்பிடாதீர்கள். இது வறுமையையும் மற்றும் மனக்கஷ்டத்தையும் உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
குழந்தை பாக்கியம்: வியாழன் அன்று தங்கம், மஞ்சள், பருப்பு அல்லது மஞ்சள் நிறம் போன்று ஏதேனும் பொருட்களை தானம் செய்யுங்கள். இப்படிச் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
வியாழனன்று யாரிடமும் பணம் கொடுக்கவோ அல்லது கடன் வாங்கவோ கூடாது. இப்படிச் செய்வதால் நிதிநிலை மிகவும் மோசமாகும் என்று சொல்லப்படுகிறது.
வெல்லம் தானம்: வியாழன் கிழமைகளில் வெள்ளம் தானம் செய்து வந்தால் உங்களுக்குச் சொத்து கிடைக்கும் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.