7 Benefits Of Sleeping Without Clothes : ஆடையின்றி உறங்குவது நம் ஊரில் பழக்கமில்லாத ஒரு நடைமுறைதான். ஆனால், இதனால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என தெரியுமா?
7 Benefits Of Sleeping Without Clothes : உறக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் விஷயமாகும். இது இருந்தால் மட்டுமே, நம்மால் சரியாக இயங்க முடியும். இப்படி தூக்கத்தை சரியாக வரவழைக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இரவில் ஆடையின்றி உறங்குவது. இதனால், உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நலன்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அது குறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
நமது உடல், குளிர்ந்த இடத்தில் ரிலாக்ஸாக உணர்வதால் நன்றாக உறக்கம் வரும். இதற்கு ஆடையின்றி உறங்குவது உதவும். இதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று நம்மால் நல்ல ஓய்வினை பெற முடியும்.
ஆடையின்றி உறங்குவதால், நமது சருமத்தால் எந்தவித இடையூருமின்றி கொஞ்சம் மூச்சு விட முடிகிறது. இதனால் சரும தொற்று பாதிப்புகளும் தடுக்கப்படுவதால், தோல் மேன்மையடைகிறது.
நாம் குளிர்ந்த நிலையில் இருக்கும் போது, உடலில் இருக்கும் பிரவுன் ஃபேட் எனப்படும் ஒரு வகை கொழுப்பு தூண்டுமாம். இதனால் உடல் எடை குறையும் எனக்கூறப்படுகிறது.
கணவன்-மனைவிக்குள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நெருக்கம் அதிகரிக்க இருவரும் ஆடையின்றி உறங்கலாம் எனக்கூறப்படுகிறது. இது உடலில் இருக்கும் ஆக்சிடாசின் அளவை அதிகரிப்பதால், இந்த நெருக்கம் ஏற்படுகிறதாம்.
பெண்கள் பலர், குறிப்பாக கர்ப்பிணிகள் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டு அவதிப்படுவர். அப்படி பாதிப்பு எதுவும் ஏற்படாமல் தடுக்க இரவில் ஆடையின்றி உறங்கலாம் எனக்கூறப்படுகிறது. ஆண்கள், இப்படி ஆடையின்றி உறங்குவதால் அவர்களின் விந்து வீரியமுடன் செயல்படும் எனக்கூறப்படுகிறது.
இரவில் ஆடையின்றி உறங்குவதால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். இதனால் உடலில் எந்த அசௌகரியமும் ஏற்படாது எனக்கூறப்படுகிறது.
ஆடையின்றி சுதந்திரமாக உறங்கும் போது நம் மனமும் சுதந்திரமாக உணருமாம். இதனால், மன அழுத்தம் அல்லது பதற்றம் போன்ற விஷயங்கள் குறையும் எனக்கூறப்படுகிறது. (பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)