Union Budget 2025: இன்னும் சில நாட்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வரக்கூடும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சாமானிய மக்கள் முதல் வணிக ஜாம்பவான்கள் வரை அனைவரும் தங்களுக்கு சாதகமான செய்திகள் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்
2025 பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கபப்படும் இபிஎஃப், இபிஎஸ் கணக்குகள் சார்ந்த அறிவிப்புகளாக இருக்கக்கூடும். குறிப்பாக, இபிஎஃப் உறுப்பினர்க்கள் தரப்பில் கடந்த சில காலமாக தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றன.
Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்
இந்த முறை மத்திய பட்ஜெட்டில் தனியார் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7500 ஆக உயர்த்தப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது செயல்படுத்தப்பட்டால், ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். ஏனெனில் தற்போது அவர்களுக்கு மிகக் குறைந்த ஓய்வூதியம்தான் கிடைக்கிறது. இதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கான கோரிக்கை என்ன?
சமீபத்தில், ஊழியர் அமைப்புகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தன. அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.7500 ஆக உயர்த்துவதாகும். தற்போது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள தனியார் ஊழியர்கள் மாதத்திற்கு ஓய்வூதியமான வெறும் ரூ.1000 மட்டுமே பெறுகிறார்கள். இந்த தொகை 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014 இல் நிர்ணயிக்கப்பட்டது.
அதற்கு முன்னர், ஓய்வூதியத் தொகை இன்னும் குறைவாக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றம் ஊழியர்களுக்கு சிறிது நிம்மதியைக் கொடுத்தது. இப்போது இந்த ஓய்வூதியத்தை மேலும் அதிகரித்து, ஊழியர்களுக்கு சிறந்த நிதிப் பாதுகாப்பை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஊழியர் சங்கங்கள் கூறியுள்ளன.
கடைசியாக, 2014 ஆம் ஆண்டில், அரசாங்கம் இந்த ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1000 ஆக உயர்த்தியது. அந்த வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் பணவீக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. பிற காரணிகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்து பார்க்கும்போது, ரூ.1000 ஓய்வூதியம் மிகக் குறைவானது என்பது தெளிவாகிறது. ஆகையால், பணி ஓய்வுக்கு பிறகு, வசதியான வாழ்க்கை வாழ, ஓய்வூதியத்தை இப்போது மாதத்திற்கு ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் கோருகிறார்கள்.
ஓய்வூதிய தொகையை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன?
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைத் தரம்: கடந்த சில ஆண்டுகளில் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ரூ.1000 ஓய்வூதியம் இனி போதுமானதாக இருக்காது. ஓய்வுக்குப் பிறகு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் ரூ.7500 ஓய்வூதியம் போதுமானதாக இருக்கும் என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.
சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பிற செலவுகள்: பல ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மாத ஓய்வூதியமாக ரூ.7500 கிடைத்தால், அவர்களால் தங்கள் மருத்துவப் பராமரிப்பை நிம்மதியாகச் செய்ய முடியும்.
சமூகப் பாதுகாப்பு: குறிப்பாக தங்கள் வாழ்க்கையின் முதுமையை அடையும் போது, அவர்களின் வேலை திறன் குறையத் தொடங்கும் போது, அரசாங்கம் அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் கூறுகிறார்கள்.
Nirmala Sitharaman: நிதியமைச்சரை யாரெல்லாம் சந்தித்தனர்?
ஊழியர் சங்கங்கள், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் பாரதிய ஷ்ராமிக் மகாசங்கம் (BMS) ஆகியவற்றின் பிரதிநிதிகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். இந்த அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் போது, ஓய்வூதியத்தை அதிகரிப்பது பற்றிப் பேசின. மேலும் ஊழியர்களுக்கான பிற வசதிகளை மேம்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தின.
குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
- ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம்: ரூ.7500 மாத ஓய்வூதியம் ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
- பணியாளர் நலனில் முன்னேற்றம்: ஓய்வுக்குப் பிறகு சிறந்த மற்றும் நிலையான வாழ்க்கையை நடத்துவதற்கு ஊழியர்கள் தேவையான பொருளாதார ஆதரவைப் பெறுவார்கள்.
- அரசாங்கத்தின் சமூகப் பொறுப்பு: இந்த நடவடிக்கை, தனியார் ஊழியர்களுக்கான தனது சமூகப் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான ஒரு வழியாக இருக்கும்.
மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான அறிவிப்பை 2025 பட்ஜெட்டில் வெளியிட்டால், அது தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும். இந்த ஓய்வூதிய உயர்வை ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது அரசாங்கம் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை ஊழியர்களிடையே உள்ளது.
மேலும் படிக்க | சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா! வருமான வரி நோட்டீஸ் வரலாம்? எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ