Unified Pension Scheme: 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. தேசிய ஓய்வூதிய முறை மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள முக்கிய மற்றும் பயனுள்ள அம்சங்களை இணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும்.
NPS to UPS Transfer Rules: NPS இலிருந்து UPS க்கு மாற்றும் விதிகள்
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) விதிகள், தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும். ஏற்கனவே ஓய்வு பெற்றவர்கள், தற்போது யுபிஎஸ் -க்கு மாற விரும்பினால், அவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) விகிதத்தின்படி வட்டியுடன் கடந்த காலத்திற்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் விதிகள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்ற தேசிய ஓய்வூதிய முறையின் முன்னாள் ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும். அத்தகைய ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி விகிதங்களின்படி வட்டியுடன் கடந்த காலத்திற்கான நிலுவைத் தொகை வழங்கப்படும்," என்று ஜனவரி 24, 2025 தேதியிட்ட அதிகாரப்பூர்வ UPS அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
NPS இலிருந்து UPS க்கு மாறும் நேரம் வரை, அவர்கள் வித்டிரா செய்த பணத்தை சரிசெய்த பிறகு, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஓய்வு பெற்ற அத்தகைய ஊழியர்களுக்கான மாதாந்திர டாப்-அப் தொகை, அவர்கள் வித்டிரா செய்த பணம் மற்றும் அவர்களுக்கு செலுத்தப்பட்ட வருடாந்திர தொகைகளை கணக்கிட்டு சரிசெய்த பிறகு வழங்கப்படும். இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும்." என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
UPS என்றால் என்ன?
UPS என்பது NPS இன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் ஒரு உறுதியான ஓய்வூதியத் திட்டமாகும். தகுதியுள்ள ஊழியர்கள் NPS இலிருந்து UPS க்கு மாறுவதைத் தேர்வு செய்துகொள்ளலாம். UPS திட்டத்தின் மூலம், ஒரு குறிப்பிட்ட பணி காலத்திற்குப் பிறகு ஓய்வு பெறும்போது உறுதியான ஓய்வூதியம் கிடைக்கிறது.
National Pension System
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் NPS இன் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட விருப்பத்தை தேர்வு செய்யலாம். அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இல்லாமல் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே தொடரலாம். இந்த விருப்பம் மத்திய அரசின் எதிர்கால ஊழியர்களுக்கும் கிடைக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Central Government Employees: UPS இன் கீழ் உறுதியான ஓய்வூதியம் பின்வரும் நிபந்தனைகளுடன் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும்:
- 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ஓய்வு பெறும்போது இதன் பலன்கள் கிடைக்கும்.
- FR 56 இன் விதிகளின் கீழ் அரசு ஒரு பணியாளருக்கு பணி ஓய்வு அளித்தால் இதன் நன் மைகளை பெறலாம்.
- குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவை காலத்திற்குப் பிறகு தன்னார்வ ஓய்வு பெற்றால் இந்த நன்மகளை பெறலாம். இருப்பினும், இந்த விஷயத்தில், ஊழியர் உண்மையாக ஓய்வு பெற வேண்டிய தேதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்.
- பணிநீக்கம் செய்யப்பட்டால், அத்தகைய ஊழியர்களுக்கு UPS நன்மைகள் கிடைக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ