வைட்டமின் பி12 நிறைந்த சைவ உணவுகள்: வைட்டமின் பி 12 நம் உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். மூளை வளர்ச்சிக்கும் நரம்பு ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம் ஆகியவற்றுக்கும் அவசியம். வைட்டமின் பி12 குறைபாடு நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்த சோகை, பலவீனம், சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி 12 இறைச்சி, மீன் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது என்பதை மறுக்க இயலாது. இருப்பினும், சைவ உணவு உண்பவர்கள் இதற்காக கவலை படத் தேவையில்லை. ஏனெனில், சில சைவ உணவுகள் (Healthy Food) வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன
வைட்டமின் பி12 ஊட்டச்சத்து நிறைந்த சில சைவ உணவுகள்
பால் மற்றும் பால் பொருட்கள்
சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி 12 இன் முக்கியமான ஆதாரமாக பால் மற்றும் அதலிருந்து பெறப்படும் தயிர், பாலாடைக்கட்டி மற்றும் நெய் போன்ற உணவுகள் உள்ளன. உங்கள் உடலின் இந்த வைட்டமின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பசுவின் பாலில் போதுமான அளவு வைட்டமின் பி12 உள்ளது, இது . தினமும் ஒரு கிளாஸ் பசும் பால் குடிப்பதன் மூலம், உங்கள் தினசரி வைட்டமின் பி12 தேவையை பூர்த்தி செய்யலாம்.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் வைட்டமின் பி12 மட்டுமல்லாது, ஃபோலிக் அமில சத்தும் காணப்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால், இரத்த சோகை ஏற்டாமல் தடுக்கலாம்.
செறிவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான பால்
சோயா பால், பாதாம் பால் மற்றும் ஓட்ஸ் பால் போன்ற தாவர அடிப்படையிலான பால் வகைகள், வைட்டமின் பி12 ஊட்டசத்தினால் செறிவூட்டப்பட்டவை. இவை சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சந்தையில் எளிதில் கிடைக்கும் இந்த செறிவூட்டப்பட்ட பால், லாக்டோஸைத் தவிர்ப்பவர்களுக்கும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஊட்டச்சத்து மிக்க ஈஸ்ட்
சீஸ் போன்ற சுவை கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த ஈஸ்ட் சூப்பர்ஃபுட் சைவ உணவு. இதில் நல்ல அளவு வைட்டமின் பி12 உள்ளது. இதை சாலட், பாஸ்தா அல்லது சூப்பில் சேர்த்து சாப்பிடலாம். சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
மேலும் படிக்க | சிறுநீரக பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? இவற்றில் கவனம் செலுத்தினால் போதும்
செறிவூட்டப்பட்ட தானியங்கள்
சந்தையில் கிடைக்கும் வைட்டமின் பி12 செறிவூட்டப்பட்ட தானியங்களை காலை உணவாக உட்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும். சைவ உணவு உண்பவர்களுக்கு செறிவூட்டப்பட்ட தானியங்கள் வைட்டமின் பி 12 ஊட்டச்சத்தின் ஆதாரமாக மட்டுமல்லாமல், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமான இரும்பு மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
காளான்
சில வகையான காளான்கள், குறிப்பாக ஷிடேக் காளான்கள், ஓரளவு வைட்டமின் பி12 சத்து கொண்டவை. காளானில் பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள நிலையில், அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் இயல்பான தேவை
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் இயல்பான அளவு 200 pg/mL முதல் 900 pg/mL என்ற அளவில் இருக்க வேண்டும். வயதானவர்களுக்கு 300 pg/mL முதல் 350 pg/mL வரை இருக்க வேண்டும். வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் அளவு இந்த அளவிற்கு குறையும் போது, வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டு, அதனால், பல வகைகளில் உடல் நல பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ