கொரோனா வைரஸ்: இந்தியாவுக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை ரஷ்யா அனுப்பியது. கொரோனா வைரஸினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை சமாளிக்கும் விதத்தில், 20 ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகள் (oxygen production units), 75 வென்டிலேட்டர்கள் மற்றும் 2,00,000 பொதி மருந்துகளை ரஷ்யா அனுப்பியுள்ளது.
இந்தியாவில் திடீரென்று எழுந்திருக்கும் ஆபத்தான கோவிட் -19 எழுச்சியின் கீழ், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சுவாச உபகரணங்கள் (lung ventilation equipment), படுக்கை கண்காணிப்பாளர்கள் (bedside monitors) கொரோனவீர் (Coronavir) உள்ளிட்ட மருந்துகள் வந்து சேர்ந்தன.
இந்த மருந்துப் பொருட்களையையும், உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு வந்த இரண்டு ரஷ்ய விமானங்கள் இந்தியாவிற்குள் வந்து சேர்ந்தன.
ALSO READ | ஆக்ஸிஜன் உபகரணங்கள் இறக்குமதி மீதான வரிகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு
முன்னதாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதைக் கண்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்தன. ரஷ்யாவும், இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தது.
“இந்திய-ரஷ்ய கூட்டுறவின் அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு கணிசமான உதவிகளை வழங்குவதற்காக ரஷ்யா, அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது”என ரஷிய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக அறிவித்தது.
A longstanding and time-tested partner! Grateful for shipment of oxygen concentrators, ventilators and other medical supplies that arrived from Russia this morning in two aircrafts. pic.twitter.com/ozrla74m5k
— Arindam Bagchi (@MEAIndia) April 29, 2021
அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள், 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வென்டிலேட்டர்கள், 150 மானிட்டர்கள் மற்றும் பிற தேவையான மருத்துவ பொருட்கள் என மொத்தம் 22 மெட்ரிக் டன் எடையுள்ள பொருட்கள் 2 விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த இரண்டு விமானங்களும் இன்று அதிகாலையில் டெல்லி வந்து சேர்ந்தன.
அந்த பொருட்கள் அனைத்தையும் உடனடியாக இந்தியாவிற்குள் அனுமதித்து, விநியோகம் செய்வதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
ALSO READ: தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR