தமிழ் சினிமாவிற்கு ரூ.1000 கோடி நஷ்டம்! எல்லாத்துக்கும் காரணம் இந்த 2 படம்தான்..

Tamil Cinema 2024 1000 Crores Loss : 2024ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான பல படங்கள் தோல்வியுற்றன. இந்த நிலையில், கோலிவுட் திரையுலகம் பெரும் நஷ்டமடைந்ததை, 2 படங்களை மட்டும் வைத்து மேற்கோள்காட்டி வருகின்றனர். அது எந்த படம் தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Jan 31, 2025, 02:50 PM IST
  • 2024ல் 1000 கோடி நஷ்டம்!
  • 200க்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி..
  • இந்த 2 படங்கள்தான் முதல் காரணம்!
தமிழ் சினிமாவிற்கு ரூ.1000 கோடி நஷ்டம்! எல்லாத்துக்கும் காரணம் இந்த 2 படம்தான்.. title=

Tamil Cinema 2024 1000 Crores Loss : கடந்த ஆண்டு, கோலிவுட் திரையுலகிற்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவ, சில சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பாராத வெற்றியை தேடி கொடுத்தது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவிற்கு சுமார் ரூ.1000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.

நாசமாய் போன ஆண்டாக அமைந்த 2024…

பல கோடி பட்ஜெட்டை முதலீடு செய்து படத்தை ஹிட் ஆக்குவதில் பாலிவுட் திரையுலகிற்கு அடுத்தபடி இருப்பது, கோலிவுட்தான். கதையே இல்லை என்றாலும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடியது வேறு ஒரு காலம். ஆனால், இப்போது பெரிய பட்ஜெட்டில் இல்லை என்றாலும் கூட கதை இருந்தான் மட்டுமே ரசிகர்கள் ஒரு படத்தை விரும்புகின்றனர். அதை நிரூபித்த ஆண்டுதான் 2024.

கடந்த ஆண்டில் அமரன், மகாராஜா, தி கோட் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன. இருந்தாலும், “கண்டிப்பா இந்த படம் சக்சஸ்தான்” என்று யூகிக்கப்பட்ட பல படங்கள் கடைசியில் மண்ணை கவ்வின. இதற்குக் காரணம் மாறிய ரசனைகளா, அல்லது அலுத்துப்போன அதர பழசான கதைகளா என்பது தெரியவில்லை. இதனால் தமிழ் திரையுலகை பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டு நாசமாய் போன ஆண்டாக அமைந்திருக்கிறது.

223 தோல்வி படங்கள்..1000 கோடி நஷ்டம்!

தமிழ் திரையுலகில் மட்டும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பித்து டிசம்பர் வரை சுமார் 241 படங்களுக்கு மேல் வெளியானது. இந்த படங்களை இயக்க சுமார் ரூ.3000 கோடி வரை செலவாகி இருக்கிறது. இதில் மொத்தம் 223 படங்கள் தோல்வியடைந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் இப்படங்களின் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் சுமார் ரூ.1000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

சில படங்கள் தோல்வியானால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் இப்படி ஒரே ஆண்டில் வெளியான நூற்றுக்கணக்கான படங்கள் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தால் அதை என்னவென்று கூறுவது? என சில சினிமா விரும்பிகள் கூறி வருகின்றனர்.

இந்த 2 படங்கள் தான் காரணமா? 

200க்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி அடைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் கடைசியில் வெளியாகி அனைவருக்கும் பேரிடியாக அமைந்த படம்தான், 2024ஆம் ஆண்டை தமிழ் சினிமாவிற்கு துரதிர்ஷ்டவசமான ஆண்டாக முடிவு செய்ய காரணமாக அமைந்துள்ளது. அந்த படம் வேறு எதுவும் இல்லை, சூர்யா நடிப்பில் வெளியான கங்குவாதான்.

2024 Loss

கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் புரொடக்ஷன் வேலைகளில் இருந்து, சுமார் ரூ.350 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இதெல்லாம் எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.106 கோடிதான். கணக்கு போட்டு பார்த்தால், இந்த படம் மொத்தமாக 244 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தில், 24% நஷ்டம் கங்குவா படத்தால் ஏற்பட்டதாகும். இதே போல, இந்தியன் 2 திரைப்படமும், சுமார் 300 கோடி செலவில் உருவானது. ஆனால் வசூல் என்னவோ, 151 கோடிதான். இதனால் அந்த 1000 கோடி நஷ்டத்தில், 14% நஷ்டம், இந்தியன் 2 படம் ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | 2024-ல் பெரிதும் ஏமாற்றிய 2 தமிழ் படங்கள்! ஒன்னு கங்குவா..இன்னொன்னு எது தெரியுமா?

மேலும் படிக்க | 2024-ல் தோல்வி படங்களை கொடுத்த டாப் 10 ஹீரோக்கள்! நம்பர் 1 இடத்தில் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News