Ayushnman Card: மூத்த குடிமக்களுக்கு ரூ.5,00,000.... ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Ayushman Bharat: ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை என்று அழைக்கப்படுகிறது. ஆயுஷ்மான் வய வந்தனா கார்டை பெற மூத்த குடிமக்கள் எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக செய்து முடிக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2025, 02:48 PM IST
  • ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை.
  • ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
  • முழு செயல்முறையை இங்கே காணலாம்.
Ayushnman Card: மூத்த குடிமக்களுக்கு ரூ.5,00,000.... ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? title=

Ayushman Bharat: மத்திய அரசு நடத்திவரும் மக்களுக்கான நலத்திட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதில் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவில் உதவி கிடைக்கிறது. இப்போது, ​​70 வயதுக்கு மேற்பட்டவர்களும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தங்கள் ஆயுஷ்மான் அட்டைகளைப் பெற்று பயன் பெறலாம்.

Ayushman Card

இந்த ஆயுஷ்மான் அட்டை, ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை என்று அழைக்கப்படுகிறது. ஆயுஷ்மான் வய வந்தனா கார்டை பெற மூத்த குடிமக்கள் எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக செய்து முடிக்கலாம். தேசிய சுகாதார ஆணையம் (NHA) தனது  X பக்கத்தில் இது குறித்த காணொளி ஒன்றைப் பகிர்ந்து இந்தத் தகவலை வழங்கியுள்ளது.

Aushman App: முதலில் ஆயுஷ்மான் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையைப் பெற, முதலில் கூகிள் பிளே ஸ்டோருக்குச் சென்று ஆயுஷ்மான் செயலியை நிறுவ வேண்டும். இதற்குப் பிறகு, பயனாளியாகவோ அல்லது ஆபரேட்டராகவோ லாக் இன் செய்யவும். கேப்ட்சா குறியீடு, மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட்டு அங்கீகாரிக்கவும். 

E-KYC

இதற்குப் பிறகு, 'Search For Beneficiary' என்ற விருப்பத்திற்குச் சென்று, ஆதார் எண்ணை உள்ளிட்டு, உங்கள் பெயர் ஏற்கனவே உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். இப்போது e-KYC-க்கான பயனாளியைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஒப்புதல் அளிக்க, தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து தொடரவும்.

e-KYC-க்குப் பிறகு கார்டைப் பதிவிறக்கம் செய்யவும்

சரிபார்ப்பு செயல்முறைக்காக ஆதார் OTP ஐ உள்ளிட வேண்டும். அதன் பிறகு, அடுத்த கட்டத்தில் புகைப்படம் எடுத்து மீதமுள்ள தகவலை நிரப்பவும். e-KYC முடிந்த சிறிது நேரத்திற்குப் பிறகு நீங்கள் உங்கள் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.

இங்கே தொடர்பு கொள்ளலாம்

இந்தத் தகவல்களை படித்த பின்னரும், உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், https://nha.gov.in/PM-JAY என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கூடுதல் தகவல்களைப் பெறலாம். இது தவிர, அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று இதைப் பற்றிய தகவகளை பெறலாம். ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையைப் பதிவு செய்வதற்கு ஏற்கனவே ஒரு ஆயுஷ்மான் அட்டை இருப்பது அவசியம் என்று வரும் செய்திகள் வெறும் கட்டுக்கதைகள். உண்மையில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். அவர்களின் குடும்பம் ஏற்கனவே ஆயுஷ்மான் அட்டையின் பயனாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

குடும்பத்தின் அனைத்து மூத்த உறுப்பினர்களுக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு கிடைக்குமா?

இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் 'ஆயுஷ்மான் அட்டை' ஒரு பகிரப்பட்ட சுகாதார காப்பீடாக இருக்கும். அதாவது இந்த சுகாதார காப்பீடு குடும்ப அடிப்படையில் வழங்கப்படும். முதலில் நீங்கள் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு குடும்ப உறுப்பினரை பரிந்துரைக்க வேண்டும். அதன் பிறகு 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பத்தின் பிற பெரியவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை வழங்கி, அவர்களை அந்த அட்டையில் சேர்க்கலாம். இதில் சேர்ந்துள்ள குடும்பத்தின் அனைத்து பெரியவர்களும் இந்த ரூ.5 லட்சம் காப்பீட்டின் கீழ் காப்பீடு செய்யப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், அனைவருக்கும் தனித்தனியாக ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு கிடைக்காது. அதாவது, வருடாந்திர வரம்பான ரூ.5 லட்சம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.

மேலும் படிக்க | 2025 பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் 10 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? நிர்மலா சீதாராமன் மாஸ்டர் பிளான்

மேலும் படிக்க | Budget 2025: நடுத்தர வர்க்க மக்களுக்கு நல்ல செய்தி நிச்சயம்... நிபுணர்கள் நம்பிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News