PF உறுப்பினர்களுக்கு அரசின் பரிசு: உமங் செயலி மூலமே இனி PF பணம் எடுக்கலாம்

EPFO Update: இனி இபிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க அதிகம் அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்போது, ​​UMANG செயலியைப் பயன்படுத்தி உங்கள் PF பணத்தை மிக எளிதாக எடுக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2025, 04:04 PM IST
  • உமங் செயலியின் நன்மைகள் என்ன?
  • UMANG செயலியிலிருந்து அனைவரும் PF பணத்தை எடுக்க முடியுமா?
  • UMANG செயலி மூலம் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான செயல்முறை என்ன?
PF உறுப்பினர்களுக்கு அரசின் பரிசு: உமங் செயலி மூலமே இனி PF பணம் எடுக்கலாம் title=

EPF Withdrawal: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இபிஎஃப் கணக்கில் பணம் எடுப்பது குறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. 

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பெருகும் வசதிகள்

இனி இபிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க அதிகம் அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்போது, ​​UMANG செயலியைப் பயன்படுத்தி உங்கள் PF பணத்தை மிக எளிதாக எடுக்கலாம். UMANG செயலி மூலம் PF பணத்தை வித்டிரா செய்வதற்கான புதிய செயல்முறையை இந்திய அரசு அறிவித்துள்ளது. புதிய செயல்முறையைப் பயன்படுத்தி UMANG செயலி மூலம் உங்கள் இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுப்பதற்கான முழுமையான விவரங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

UMANG App: உமங் செயலியின் நன்மைகள் என்ன?

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த செயலி மூலம், பயனர்கள் உதவித்தொகை திட்டங்கள், ஓய்வூதியங்கள், பாஸ்போர்ட்கள், LPG எரிவாயு மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள் தொடர்பான சேவைகளை அணுக முடியும்.

இந்த செயலி இத்தனை பிரபலமாக இருக்க காரணம் என்ன?

இந்த செயலியின் முக்கிய நன்மைகளில் ஒன்று, பயனர்கள் தங்கள் EPF கணக்குகளில் இருந்து எளிதாக பணத்தை எடுக்க இது அனுமதிப்பதுதான். இதற்கு பயனர்கள் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மேலும் இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் PF கணக்குகளிலிருந்து விரைவாக பணத்தை எடுக்கலாம். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தேசிய மின்-ஆளுமை பிரிவு (NeGD) ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் UMANG செயலி, பல்வேறு டிஜிட்டல் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த தளத்தை வழங்குகிறது.

UMANG செயலியிலிருந்து அனைவரும் PF பணத்தை எடுக்க முடியுமா?

- ஆதார் மற்றும் UAN இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த நன்மையைப் பெற முடியும்.
- ஆதார், PAN மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் EPFO ​​போர்ட்டலில் புதுப்பிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த நன்மைகள் கிடைக்கும்.
- வேலையை இழந்திருந்தால், வேலையில்லாமல் இருப்பவர்கள், பணி ஓய்வு பெறுபவர்கள், மருத்துவ அவசரநிலையை எதிர்கொண்டுள்ளவர்கள் இதன் மூலம் பணத்தை எடுக்கலாம். 
- கூடுதலாக, கல்விக்காக அல்லது வீடு வாங்க விரும்புபவர்களும் இதன் மூலம் இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்க விண்ணப்பிக்கலாம்.

UMANG செயலி மூலம் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான செயல்முறை:

- முதலில், Google Play Store அல்லது Apple App Store இலிருந்து UMANG செயலியை இன்ஸ்டால் செய்யவும்.
- செயலியில் பதிவுசெய்து லாக் இன் செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு OTP அனுப்பி சரிபார்த்து லாக் இன் செய்யவும்.
- முகப்புப் பக்கத்தில், EPFO ​​பிரிவுக்குச் செல்லவும்.
- ‘Employee-Centric Services’ என்பதைக் கிளிக் செய்து, ‘Raise Claim’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் UAN மற்றும் உங்கள் மொபைலில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.
- க்ளெய்ம் படிவத்தை நிரப்பி, முழு PF தொகையையும் எடுக்க வேண்டுமா அல்லது பகுதியளவு தொகையை எடுக்க வேண்டுமா என்பதைக் குறிப்பிடவும்.
- தேவையான விவரங்களை வழங்கி, பணம் திரும்பப் பெறுவதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்.
- பின்னர் விண்ணப்பிக்கவும். 
- மருத்துவச் சான்றிதழ் அல்லது கல்விச் சான்றிதழை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, செயலியின் ‘டிராக் கிளைம்’ பிரிவில் அதைக் கண்காணிக்கலாம்.

மேலும் படிக்க | 2025 பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் 10 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? நிர்மலா சீதாராமன் மாஸ்டர் பிளான்

மேலும் படிக்க | Budget 2025: நடுத்தர வர்க்க மக்களுக்கு நல்ல செய்தி நிச்சயம்... நிபுணர்கள் நம்பிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News