புரோட்டீன் பவுடர் உண்மையில் பாதுகாப்பானதா?

Protein Powder Side Effects: புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் சிறிய பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Written by - Praveen S | Edited by - Praveen S | Last Updated : Mar 14, 2022, 08:56 PM IST
  • புரோட்டின் பவுடர், நாம் உண்ணும் உணவுக்கு மாற்று கிடையாது.
  • புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு பாதிப்பு வராதா?
  • பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
புரோட்டீன் பவுடர் உண்மையில் பாதுகாப்பானதா? title=

புரோட்டீன் பவுடர்: பால், முட்டை அல்லது தாவர வகைகளில் இருந்து புரோட்டீன் சத்தை பிரித்து எடுத்து அதனுடன் வைட்டமின்ஸ் (Vitamins), மினெரல்ஸ் (Minerals), சர்க்கரை, செயற்கை சுவையூட்டி (Artificial Flavoring), தடிப்பான்கள் (Thickeners) எல்லாம் சேர்த்து தயாரித்தால் அதுதான் புரோட்டின் பவுடர்.

புரோட்டின் பவுடர், நாம் உண்ணும் உணவுக்கு மாற்று கிடையாது, மாறாக நம் உணவோடு சேர்த்து எடுத்து கொள்ளப்படும் ஒரு சப்ளிமெண்ட் தான் என்பதை நாம் முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க: புரோட்டீன் பவுடர் என்றால் என்ன? யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம்?

புரோட்டீன் பவுடரால் ஆபத்தா?

புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொண்டால் கிட்னி வீணாகிடும், எலும்பு தேய்ந்து  போகும்,  கால்சியம் சத்து குறையும், ஆண்மை குறையும் என தவறான வதந்தி இருக்கின்றது. அதுபோன்ற பாதிப்பு நடந்ததாக இதுவரை ஆதாரம் ஏதும் இல்லை.

புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் சிறிய பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயப்பட வேண்டாம், தெளிவாக பாக்கலாம் வாங்க

பக்க விளைவுகளுக்கான கரணங்கள்:

1. சிலருக்கு பால் அல்லது பால் சம்பந்தப்பட்ட உணவுகள் உடலுக்கு ஏற்காது, லேசான அரிப்பு போன்ற அலர்ஜி வரும். இதுபோன்ற அலர்ஜி இருப்பவர்கள் பாலால் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் பவுடர் (Whey & Casein Protein) எடுத்துக்கொண்டால் அலர்ஜி போன்ற பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது 
 

தீர்வு: தாவர வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்ளலாம்.

2. புரோட்டீன் பவுடருடைய பாதுகாப்பை அந்தந்த நிறுவனங்களே மதிப்பிடலாம் என FDA (Food and Drug Administration) விட்டுவிட்டது, எனவே, ஒரு புரோட்டீன் பவுடரில் உற்பத்தியாளர்கள் கூறுவது உண்மையிலேயே உள்ளதா என்பதை அறிவது கடினம்.
 

தீர்வு: மூன்றாம் தரப்பு நிறுவனம் சோதனை (third-party testing) செய்யப்பட்டு அதன் சான்றிதழ் உள்ள நிறுவனத்திடம் இருந்து புரோட்டீன் பவுடரை வாங்கி பயன் படுத்தலாம். 

3. புரோட்டீன் பவுடருடன் சேர்க்கப்படும் மற்ற பொருட்கள் மூலம் அலர்ஜி ஏற்படலாம். அனால் இது போல நடப்பது ரொம்ப குறைவு என்றாலும் ஜாக்கிரதை அவசியம்.
சில நிறுவனங்கள் மலிவு விலையில் கிடைக்கும் புரோட்டீன் (சிக்கன், அரிசி, சோயா) பவுடரை சேர்க்கிறார்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது
 

தீர்வு: சந்தையில் இருக்கும் நல்ல நிறுவனத்திடம் இருந்து புரோட்டீன் பவுடரை வாங்கி பயன்படுத்தலாம், மூன்றாம் தரப்பு நிறுவனம் சோதனை(third-party testing) செய்யப்பட்ட கம்பெனியாக இருந்தால் இன்னும் நல்லது.

4. சில நிறுவனங்கள் சுவைக்காக புரோட்டீன் பவுடருடன் சர்க்கரையை அதிகம் சேர்பதுண்டு. இதனால உடல் எடை கூடுவதற்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. 
ஒரு நாளொன்றுக்கு பெண்கள் 24 கிராம், ஆண்கள் 36 கிராம் சர்க்கரை வரை எடுத்துக்கொள்ளலாம் என ‘தி அமெரிக்கன் ஹார்ட் அஸோஸியேஷன்’ (The American Heart Association) பரிந்துரை செய்கிறார்கள்.

தீர்வு: மூன்றாம் நிறுவனம் சோதனை(third-party testing) செய்யப்பட்டு அதன் சான்றிதழ் உள்ள நிறுவனத்திடம் இருந்து புரோட்டீன் பவுடரை வாங்கி பயன் படுத்தலாம். 

எளிமையா சொல்லனும்னா…

புரோட்டின் பவுடர், நாம் உண்ணும் உணவுக்கு மாற்று கிடையாது, மாறாக நம் உணவோடு சேர்த்து எடுத்து கொள்ளப்படும் ஒரு சப்ளிமெண்ட். உணவு மூலமாக புரோட்டீன் சத்தை பெற்றுக்கொள்வது மிகவும் சிறந்த வழி, ஒருவேளை புரோட்டீன் அதிகம் தேவைப்படும் பட்சத்தில் தாராளமாக நல்ல புரோட்டீன் பவுடரை பயன்படுத்தலாம், அதனால் நம் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எடுத்துக்கொள்ளும் முன் பயிற்சியாளர்/மருத்துவர் பரிந்துரை அவசியம்.

Author Desclaimer - Protein Powder is a supplement, Its not a food replacement. Always Consult your Coach, Trainer or Your physician for Advise. 

மேலும் படிக்க | Cycling Benefits: சைக்கிள் ஓட்ட பிடிச்சா, கொழுப்பும், நோய்களும் உங்க கிட்டகூட வராது!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News