சிறுநீரக கல் அறிகுறிகள்: மனித உடலை மிகவும் நன்றாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், பல கடுமையான நோய்கள் வராமல் நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம். இந்த நோய்களில் ஒன்று சிறுநீரக கல் ஆகும். சிறுநீரகத்தில் கல் உருவானால், அதன் காரணமாக, மூட்டில் வலி மற்றும் வீக்கம் தொடங்குகிறது.
சிறுநீரக கல் உள்ள நோயாளிகள் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், அது அதன் தீவிர வடிவத்தையும் எடுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை முறைக்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.
சிறுநீரக கல் அறிகுறிகள்
- சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி
- அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்ற உணர்வு
- கடுமையான வயிற்று வலி
- பசியின்மை
- குமட்டல்
- காய்ச்சல்
உப்பின் அதிகப்படியான பயன்பாடு
உணவில் அதிக உப்பைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இதனால் சிறுநீரக கல் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படும். உணவில் அதிக உப்பை உட்கொள்வது சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக கல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | Heart Health: இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ‘சில’ பழங்கள்!
குளிர் பானங்கள் குடிப்பது ஆபத்தானது
சிறுநீரக கல் உள்ள நோயாளிகள் குளிர் பானங்கள் மற்றும் டீ-காபி ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. சிறுநீரக கல் நோயாளிகளுக்கு நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். குளிர் பானங்களில் உள்ள அமிலம் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
அசைவ உணவை கைவிடுங்கள்
அசைவத்தில் அதிக புரதம் உள்ளது. ஆகையால் அதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக கல் கண்டறியப்பட்டால், உணவில் உப்பு மற்றும் புரதத்தை குறைக்க வேண்டும்.
தக்காளி
தக்காளி பெரும்பாலும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியில் ஆக்சலேட்டின் அளவு அதிகமாக உள்ளது. சிறுநீரக கற்கள் உள்ள நோயாளிக்கு இது ஆபத்தானது. உங்களுக்கு தக்காளி பிடிக்கும் என்றால், காய்கறியில் சேர்ப்பதற்கு முன் அதன் விதைகளை அகற்றிவிட்டு சேர்ப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் லெவலை குறைக்கனுமா? அப்போ இந்த பொருட்களை யூஸ் பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ