Maha Kumbh Mela Latest News: நீங்கள் வீட்டிலிருந்தே மகா கும்பமேளா நிகழ்ச்சியை தொடர்ந்து நேரலையில் இலவசமாக பார்க்க விரும்பினால், வெவ்வேறு தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. அதுக்குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்
மகா கும்பமேளா 2025
2025 ஆம் ஆண்டுக்கான மகா கும்பமேளா, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜின் சங்கம் நகரில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை என 45 நாட்களுக்கு நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில், இந்தமுறை சுமார் 40 கோடி மக்கள் சங்கமத்தில் நீராடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்தும் கோடிக்கணக்கான மக்கள் மகா கும்பமேளாவில் கலந்துக்கொள்ள பிரயாக்ராஜ் நகரை நோக்கி படை எடுத்துள்ளனர். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று புனித நதிகள் ஒன்றுக் கூடும் இடத்தில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இங்கு நீராடினால் பாவம் நீங்கி மோட்சம் உண்டாகும் என நம்பப்படுவதால், பாக்கியம் என்று மக்கள் கருதுகின்றனர்.
வீட்டிலிருந்தே நேரடியாக மகா கும்பமேளா நிகழ்ச்சியை பார்க்கலாம்
மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடி வருவதால், அங்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து நீங்கள் பயந்து, பிரயாக்ராஜ் நகருக்கு செல்ல முடியாவிட்டாலும், பணி சுமை அல்லது வேறு சில காரணமாக செல்ல முடியவில்லை என்றாலும், கவலை வேண்டாம். இந்த மகா கும்பமேளா நிகழ்வோடு தொடர்பில் இருக்க விரும்பினால், நீங்கள் வீட்டிலிருந்தே அதை நேரலையில் பார்க்கலாம். மகா கும்பமேளா நிகழ்ச்சி வெவ்வேறு தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
வோடபோன் ஐடியா (Vi) முக்கிய அறிவிப்பு
சமீபத்தில், தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi), வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான சேமரூ (Shemaroo) நிறுவனத்துடன் வுடன் இணைந்து மகா கும்பமேளா 2025 நிகழ்வை நேரடியாக ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது. இந்த நேரடி ஒளிபரப்பு விஐ மூவிஸ் அண்ட் டிவி (Vi Movies and TV) செயலியிலும், வோடபோன் ஐடியா (Vi) செயலியிலும் காண்பிக்கப்படும் என்று வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் நேரடி ஸ்ட்ரீமிங்கைத் தவிர, பதிவுசெய்யப்பட்ட காணொளிகளையும் பார்க்கும் வாய்ப்பையும் பயனர்கள் பெறுவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.
இலவசமாக மகா கும்பமேளா நிகழ்ச்சி எப்படி பார்ப்பது?
நீங்கள் வோடபோன் ஐடியா (Vi) சந்தாதாரராக இருந்தால், நிறுவனத்தின் பல திட்டங்களுடன் விஐ மூவிஸ் அண்ட் டிவி (Vi Movies and TV) செயலிக்கான அணுகல் இலவசமாக கிடைக்கிறது. இது தவிர, பயனர்கள் இந்த ஸ்ட்ரீமிங்கை Vi செயலியிலும் பார்க்கலாம். வோடபோன் ஐடியா (Vi) சந்தாதாரராக இல்லாவிட்டாலும், விஐ மூவிஸ் அண்ட் டிவி (Vi Movies and TV) செயலியை பதிவிறக்கம் செய்து நேரடி ஒளிபரப்பைப் பார்க்க முடியும். அதுமட்டுமில்லாமல் உங்களிடம் வேறொரு நிறுவனத்தின் சிம் கார்டு இருந்தாலும், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஐ மூவிஸ் அண்ட் டிவி (Vi Movies and TV) செயலியைத் தவிர, இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பிற செயலிகளிலும் காட்டப்படுகிறது. மகா கும்பமேளா 24X7 நேரலையாக ஒளிபரப்பப்படும் ஓம்டிவி ஓடிடி (OMTV OTT) செயலியின் உதவியையும் நீங்கள் பெறலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்கள் இரண்டிலும் கிடைக்கிறது மற்றும் இலவச ஸ்ட்ரீமிங் விருப்பத்தை வழங்குகிறது. உங்களிடம் OTTplay சந்தா இருந்தால் மகா கும்பமேளா நிகழ்வை நேரலையிலும் பார்க்கலாம்.
மேலும் படிக்க - கும்பமேளாவுக்கும்... மகா கும்பமேளாவுக்கும்... என்ன வித்தியாசம் தெரியுமா?
மேலும் படிக்க - மகா கும்பமேளா வரலாறு, முக்கியத்துவம், முக்கிய தேதிகள்..!
மேலும் படிக்க - மகா கும்பமேளா: உ.பி.,க்கு வரும் வருவாய் எவ்வளவு தெரியுமா? கேட்டால் அரண்டு போவீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ