ஒவ்வொரு வீட்டிலும் பல்லி இருப்பது இயல்பானதாக இருந்தாலும் இது வீட்டில் நன்மையும் அளிக்கும் மற்றும் தீமையும் அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதனைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு உங்கள் வீட்டில் பள்ளி இருந்தால் நீங்கள் எப்படி இருக்க வேண்டும். அதனை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, கொசு மற்றும் பல்லி போன்றவை வீட்டில் இருப்பது இயல்பான ஒன்று. ஆனால் சிலருக்கு இது போன்ற பூச்சிகள் இருப்பதால் வீட்டில் உள்ளவர்களுக்குத் தொற்று ஏற்படலாம் அல்லது ஏதேனும் பலன்கள் விளைவிக்கலாம். அந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும் பல்லி சுத்துவது இயல்பான ஒன்று. இருந்தாலும், இதனால் உங்களுக்கு என்ன விஷயங்கள் வீட்டில் உண்டாகும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
ஜோதிடத்தில் பல்லியின் சுபம் மற்றும் அசுபம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வீட்டில் பல்லி இருப்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் மங்களகரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜோதிடத்தில் பல்லியை லக்ஷ்மி தேவியுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் புது வீடு கட்டி தன் வீட்டில் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லியைச் சிலர் வைப்பது உண்டு. இது வீட்டில் சந்தோஷத்தையும் மற்றும் செல்வங்களையும் வழங்குவதாகச் சொல்லப்படுகிறது.
ஜோதிடத்தில் இது பற்றி கூறுகையில் தீபாவளி அன்று உங்கள் வீட்டில் பல்லி இருந்தால் ஆண்டும் முழுவதும் செல்வம் நிறைந்து மகிழ்ச்சி பொங்கியே இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னோர்களின் ஐதீகத்தில் பல்லியைப் பார்ப்பது நம் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெரும் பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
உங்கள் வீட்டில் பல்லி இருந்தால் அதனை அடிக்கவோ, துரத்தவோ கூடாது. குறிப்பாக அதனைத் துன்புறுத்தக் கூடாது.
ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு மதிப்பைக் கொண்டுள்ளது. அது போல் இதற்கும் தனிமதிப்பு உண்டு. இதனால் இதனைத் தெய்வத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.
இந்த பல்லி வீட்டில் இருப்பதால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் உறவுகளுடன் அன்பு மற்றும் பாசம் நிறையச் செய்யும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.