என்ன சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத ஜப்பானியர்கள்! ‘இந்த’ 5 பழக்கங்கள் காரணம்..

Japanese Techniques To Maintain Fitness : ஜப்பானியர்கள் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் எடையே ஏற மாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தினசரி கடைபிடிக்கும் சில பழக்கங்கள்தான். அவை என்னென்ன தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Jan 16, 2025, 05:58 PM IST
  • எடை ஏறாமல் இருக்க ஜப்பானியர்கள் செய்வது..
  • தினசரி பழக்க வழக்கங்கள்..
  • என்னென்ன தெரியுமா?
என்ன சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத ஜப்பானியர்கள்! ‘இந்த’ 5 பழக்கங்கள் காரணம்.. title=

Japanese Techniques To Maintain Fitness : உலக நாடுகள் பலவற்றிற்கு பல விஷயங்கள் முன்னோடியாக இருக்கிறது ஜப்பான். இந்த நாட்டில் வாழும் மக்களை பார்த்தால் அனைவரும் ஒரே மாதிரியான உடல் தோற்றம் கொண்டவர்களாக இருப்பர். இவர்களை பார்க்கும்போது, “எப்படி எல்லாரும் ஒல்லியா இருக்காங்க?” என கேட்கத் தோன்றும். அதுமட்டுமின்றி ஜப்பானியர்களில் ஒரு சிலர் மட்டுமே அதிக உடல் எடையுடன் அவதிப்படுவராம். இப்படி பெரும்பாலானோர் ஒல்லியாக இருக்க காரணம், இவர்கள் தினசரி கடைபிடிக்கும் சில பழக்கங்கள்தான் எனக்கூறப்படுகிறது. இந்த பிட்னஸ் ரகசியம் தெரிந்து கொண்டால் நாமும் அவர்களை போல சீரான உடல் எடையுடன் பவர்ஃபுல்லாக இருக்கலாம். அந்த பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

பகுதி உணவு:

ஜப்பானியர்கள், தங்களது உணவுகளை பகுதி பகுதியாக பிரித்து சாப்பிடுகின்றனர். கார்ப்ஸ் உணவுகளை எடுத்து எடுத்துக்கொள்ளும் போது, அதனுடன் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும், காய்கறிகளையும் எடுத்துக் கொள்கின்றனர். இத்துடன், அவர்கள் அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கின்றனர். இதனால், அவர்களின் உடல் எப்போதும் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறது. சிறிய அளவிலான கிண்ணம், டிஃபன் பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதால் நம்மாலும், பகுதி சாப்பாட்டை சரியாக பின்பற்ற முடியும்.

மெதுவாக சாப்பிடுவது:

ஜப்பானில் பலர், மெதுவாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். காரணம், மெதுவாக ஒவ்வொரு உணவையும் சுவைத்து-ருசித்து சாப்பிடும் போது அதில் இருக்கும் சுவையை நாம் அனுபவிப்பதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க முடியும். சரியாக மென்று சாப்பிடுவடால், அவை நன்றாக செரிமானமும் ஆகிவிடுகிறது. இது, அவர்களின் உடல் அந்த உணவை ஏற்றுக்கொள்வதற்கு நேரத்தையும் வழங்குகிறது. இதனால், எடையும் ஏறாமல் இருக்கிறது. நமது மூளைக்கு, நாம் சாப்பிட ஆரம்பிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளவே 20 நிமிடம் ஆகுமாம். எனவே, மெதுவாக சாப்பிடுவது, மூளை அதை தெரிந்து கொண்டு, வயிற்றுடன் சேர்ந்து வேலை செய்ய உதவுமாம்.

ஹெல்த் ட்ரிங்க்ஸ்: 

ஜப்பானியர்கள், தங்களின் உணவுடன் ஹெல்தியான பானங்களையும் குடிக்கின்றனர். உதாரணத்திற்கு அங்கிருக்கும் பெரும்பாலானோருக்கு கிரீன் டீ ரொம்ப ஃபேவரட் ஆம். இதனை அவர்கள் ஒரு நாளில் பல்வேறு வேலைகளில் குடிக்கின்றனர். கிரீன் டீயில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பு எரிப்பதற்கும் உதவும். இது, அழற்சியை தடுத்து இதய நலனையும் பாதுகாக்குமாம். இதனால், ஒட்டுமொத்த உடல் நலனும் நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி உடலில் இருக்கும் LDL கொழுப்பை குறைக்க உதவும். இதனால் இதய நோய் பாதிப்புகள் எதுவும் வராமல் இருக்குமாம்.

பதப்படுத்தப்படாத உணவுகள்:

ஜப்பானியர்கள், ஃப்ரெஷ் ஆக இருக்கும் பதப்படுத்தப்படாத உணவுகளை தங்களின் ஹெல்தியான வாழ்க்கை முறையில் சேர்த்துக்கொள்கின்றனர். இவர்களின் டயட்டில் இருப்பது காய்கறிகள், பழங்கள் மற்றும் மெல்லிய புரதம் நிறைந்தவைகளாக இருக்குமாம். மேலும், பதப்படுத்தப்படும் உணவுகளை சாப்பிடாத இவர்கள், ஃபிட் ஆக இருக்க அவற்றை முற்றிலுமாக தவிர்க்கின்றனராம்.

தினசரி நடவடிக்கைகள்:

ஜப்பானியர்கள் தினமும் ஆக்டிவான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். வாக்கிங் செல்வது, நெடுந்தூரம் சென்றாலும் சைக்கிள் எடுத்துக்கொண்டு செல்வது, லிஃப்டை பயன்படுத்தாமல் படியில் ஏறுவது ஆகியவை இவர்களை அறியாமலேயே இவர்கள் தினமும் செய்யும் விஷயங்கள் ஆகும். இதனால் அவர்கள் ஆக்டிவான வாழ்க்கை முறையில் இருக்கின்றனர். இது, அவர்களை ஃபிட் ஆக வைத்துக்கொள்ள உதவுகிறது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 1.5 வருடத்தில 45 கிலோ குறைந்த சாரா அலிகான்! தினமும் செய்த 2 விஷயங்கள்..

மேலும் படிக்க | எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்! பின்பற்றும் டயட் இதுதான்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News