Most sixes in champions trophy: அடுத்த மாதம் 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் இடையே அதன் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியை அறிவித்து தொடருக்கான விறுவிறுப்பைக் கூட்டி வருகின்றனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். அவர் 13 போட்டிகளில் விளையாடி 17 சிக்சர்களை விளாசியுள்ளார்.
அடுத்ததாக அதிரடிக்கு பெயர் போன முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 15 சிக்சர்களை அடித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 14 சிக்சர்களை விளாசியுள்ளார்.
இப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன். இவர் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 12 சிக்சர்களை விளாசியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 11 சிக்சர்களை விளாசி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 10 சிக்சர்களை அடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி 10 சிக்சர்களை விளாசினார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரெய்க் மெக்மில்லன் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 8 சிக்சர்கள் அடித்துள்ளார்.