8வது ஊதியக்குழு: சம்பளத்தை ராக்கெட்டாக உயர்த்தும் ஃபிட்மென்ட் ஃபாக்டர்... அப்படி என்றால் என்ன?

8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அபரிமிதமாக உயர வாய்ப்புள்ளதற்கு என்ன காரணம், அதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 17, 2025, 05:41 PM IST
  • ஃபிட்மென்ட் ஃபாக்டர் உயர்ந்தால் அடிப்படை ஊதியமும் உயரும்.
  • 6வது ஊதியக்குழுவின் கீழ் குறைந்தபட்ச அடிப்பை ஊதியம் ரூ.7 ஆயிரம்
  • 7வது ஊதியக்குழுவின் கீழ் குறைந்தபட்ச அடிப்பை ஊதியம் ரூ.18 ஆயிரம்
8வது ஊதியக்குழு: சம்பளத்தை ராக்கெட்டாக உயர்த்தும் ஃபிட்மென்ட் ஃபாக்டர்... அப்படி என்றால் என்ன? title=

8th Pay Commission Latest News Updates: மத்திய அமைச்சரவை 8வது ஊதியக்குழுவுக்கு நேற்று (ஜன. 16) ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். 

அவர்களின் நீண்ட கால கோரிக்கையான 8வது ஊதியக்குழு, இன்னும் சில காலத்தில் அமலுக்கு வர உள்ளது எனலாம். இதனால், சுமார் 50 லட்ச மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 65 லட்ச ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.

8வது ஊதியக்குழு: அடிப்படை ஊதியம் எவ்வளவு உயரும்?

8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் இவர்களின் மாத வருமானம், ஓய்வூதிய தொகை, கொடுப்பனவுகள் ஆகியவை மாற்றியமைக்கப்படும். குறிப்பாக, 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் மாத வருமானம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் அபரிமிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor). அதாவது இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறைவாக இருந்தால் மாத சம்பளம் குறையும், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகமாக இருந்தால் மாத சம்பளமும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | 8வது ஊதிய குழுவிற்கு அமைச்சரவை ஒப்புதல்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு 186% சம்பள உயர்வு கிடைக்குமா...

6வது ஊதியக்குழுவின் போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.86 ஆக இருந்தது. இதனால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.7 ஆயிரம் ஆக இருந்தது. அதன்பின் தற்போது 7வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதனால், ரூ.7 ஆயிரத்தில் இருந்து அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயர்ந்தது. அப்படியிருக்க, வரும் 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 அல்லது அதற்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒருவேளை, 8வது ஊதியக்குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால் அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.51 ஆயிரத்து 480 ஆக உயரும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்து 740 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசு ஊழியர்களின் சங்கம் தொடர்ந்து ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒருவேளை இது அமலுக்கு வந்தால் மேலும் வருமானம் உயரும்.

8வது ஊதியக்குழு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?

அரசு ஊழியர்களின் மாத வருமானம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகியவை பணவீக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுவதற்கு பின்பற்றப்படும் முக்கியமான வழிமுறைதான் இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டர். பல்வேறு காரணிகளின் அடிப்படையில், புதிய ஊதியத்திற்கு ஏற்ப அடிப்படை வருமானம் உயர்த்தப்பட்டு கணக்கிடப்படும்.

இது மொத்த சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம், ஊழியர்களின் வாங்கும் திறன் அதிகமாக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.

8வது ஊதியக்குழு: எப்படி ஃபிட்மென்ட் ஃபாக்டர் இறுதி செய்யப்படும்?

அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக உயர்த்தக் கோரிக்கை வைத்து வருகிறது. பணவீக்கம், வாழ்க்கைத் தரம் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சம்பளத்தை போதுமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். அரசின் பொருளாதார நிலை, பணவீக்க விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே ஃபிட்மென்ட் ஃபாக்டர் இறுதி செய்யப்படும்.

மேலும் படிக்க | வருகிறது 8ஆவது ஊதியக்குழு: இப்போ ரூ.40 ஆயிரம் வாங்கினால், இனி மாதச் சம்பளம் எவ்வளவு உயரும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News