கடைசி தேதி ஜனவரி 23.. வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை!

PNB KYC Update News:  உங்களிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கு இருந்தால், இன்றே இந்த முக்கியமான வேலையைச் செய்யுங்கள். உங்கள் கணக்கு விரைவில் மூடப்படலாம அல்லது வங்கிக் கணக்கை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 17, 2025, 09:22 AM IST
கடைசி தேதி ஜனவரி 23.. வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை!  title=

Punjab National Bank Latest News: பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியச்செய்தி. இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தால், கவனமாக இருப்பது முக்கியம். ஏனெனில் வங்கி கூறிய இந்த செயலை உடனடியாக செய்யாவிட்டால் உங்கள் கணக்கு விரைவில் மூடப்படலாம அல்லது உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று வங்கி சார்பில் தெரிவிகிகப்பட்டு இருக்கிறது. எனவே நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளராக இருந்தால், KYC எப்படி அப்டேட் செய்வது? KYC அப்டேட் செய்ய கடைசி தேதி என்ன? KYC அப்டேட் செய்யவில்லை என்றால் என்ன பாதிப்பு ஏற்படும் போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.

KYC அப்டேட் செய்ய கடைசி தேதி விவரம்

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC (நோ யுவர் கஸ்டமர்) விவரங்களை பதிவேற்றும் செய்யும் நடவடிக்கை உடனடியாக எடுக்க எடுக்காவிட்டால் உங்கள் கணக்கை பயன்படுத்துவதில் செக்கள் ஏற்படலாம். நீங்கள் இதுவரை பஞ்சாப் நேஷனல் வங்கியில் KYC விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால், ஜனவரி 23, 2025 க்குள் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) தகவலைப் புதுப்பிக்க மறக்காதீர்கள்.

KYC குறித்து இந்திய ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) விதிமுறைகளின்படி, அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் KYC விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. உங்கள் கணக்கின் சீரான செயல்பாட்டை உறுதிசெய்ய, ஜனவரி 23, 2025 க்குள் உங்கள் KYC புதுப்பிப்பை முடிக்கவும்.

PNB வங்கியில் KYC அப்டேட் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?

வாடிக்கையாளர்கள் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, சமீபத்திய புகைப்படம், பான் அட்டை, படிவம் 60, வருமானச் சான்று மற்றும் மொபைல் எண் (ஏற்கனவே வழங்கப்படவில்லை என்றால்) உள்ளிட்ட தகவல்களை, எந்தவொரு கிளையிலும் தேவையான பிற KYC விவரங்களை வழங்குமாறு பஞ்சாப் நேஷனல் வங்கி கேட்டுக்கொண்டு உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் KYC அப்டேட் எப்படி செய்வது?

இந்த KYC செயல்முறையை நீங்கள் PNB One செயலி மூலமாகவும் அல்லது பிஎன்பி இன்டர்நெட் பேங்கிங் (Internet Banking Services) மூலமாகவும் அப்டேட் செய்துக்கொள்ளலாம். மேலும் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பிஎன்பி வங்கி கிளைக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் KYC விவரங்களை அனுப்புவதன் மூலமாகவும் KYC விவரங்களை அப்டேட் செய்துக்கொள்ளலாம். 

பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை

உங்கள் KYC விவரங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறினால் உங்கள் கணக்கு செயல்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று வங்கி எச்சரித்துள்ளது. KYC விவரங்களை அப்டேட்  செய்வது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், அருகிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம். அல்லது https://www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவும் அறிந்துக்கொள்ளலாம்.

KYC என்றால் என்ன? ஏன் அப்டேட் செய்ய வேண்டும்

உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (Know Your Customer) என்பது வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கப் பயன்படுத்தும் ஒரு செயல்முறையாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வாடிக்கையாளர்கள் KYC செயல்முறை புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - ஜாக்பாட்... ரூ.56 லட்சம் பெற்றுத் தந்த பழைய 100 ரூபாய் நோட்டு... அப்படி என்ன தான் இருக்கு

மேலும் படிக்க - மக்களே கவனம்! அதிக வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? RBI முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க - RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News