உடல் பருமனை குறைக்க, டயட் உடற்பயிற்சி என பல்வேறு வகையில் முயற்சி செய்த போதிலும், உடல் பருமனோ தொப்பையோ கரையவே இல்லை என்றால், சில ஹார்மோன்கள் அளவு உடலில் சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. கடுமையான முயற்சிக்குப் பிறகும், உடல் எடை குறையாததற்கு, ஹார்மோன்கள் சமநிலை இன்மை காரணமாக இருக்கலாம்.
உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடு
உடலில் ஹார்மோன்கள் சமநிலையில் இல்லை என்றால், வளர்ச்சிதை மாற்றம், பசியின்மை, செரிமான பிரச்சனைகள் என பல வகையான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வளர்ச்சிதை மாற்றம் பாதித்தால், உடல் எடை இழப்பு என்பது சாத்தியமில்லாமல் (Health Tips) ஆகிவிடும். இந்நிலையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய ஹார்மோன் பரிசோதனைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கார்டிசோல்
கார்டிசோல் என்னும் ஹார்மோன் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும். மேலும் இது செரிமானம் பாதிக்கப்படவும், உடலில் கொழுப்பு சேரவும் முக்கிய காரணமாகிறது. கார்டு அதிகமாக இருந்தால், நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது. எனவே இதனை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. கார்டிசோலின் அளவு காலையிலும் மாலையிலும் மாறுபடும் என்பதால், அதற்கேற்றபடி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
லெப்டின்
லெப்ட்டின் என்னும் ஹார்மோன் ரத்த செல்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் அளவு சீராக இல்லை என்றால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். இது செரிமான திறனையும் பாதிக்கிறது. மேலும் மூளையின் செயல் திறனையும் இது பாதிக்கும். சில சமயங்களில் லெப்டின் ரெசிஸ்டன்ஸ் என்ற நிலை உருவாகும். இதனால் அதிக பசி ஏற்படும். எனவே தேவைக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன் குறையாமல் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, லிப்டின் ஹார்மோன் சீராக உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்கவும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் காலையில் இந்த 3 பால் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது!
தைராய்டு
தைராய்டு ஹார்மோன்கள் வளர்ச்சிதை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் செரிமானம் பாதிக்கப்பட்டு, உடல் எடை கூடுகிறது. எனவே, என்ன செய்தாலும் உடல் பருமன் குறையாமல் இருப்பவர்கள், தைராய்டு ஹார்மோன் பிரச்சனை உள்ளதா என்பதை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.
இன்சுலின்
கணையத்தில் உற்பத்தி செய்யும் ஹார்மோனான இன்சுலின், உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு, உடலில் கெட்ட கொழுப்பும் சேர்ந்து விடும். உடலில் இன்சுலின் எதிர்ப்பு இருந்தால், இந்த பாதிப்பு ஏற்படலாம். எனவே, உடலில் இன்சுலின் சரியாக சுரக்கிறதா என்பதை பரிசோதித்து பார்த்து அறிந்து கொள்ளவும்.
குடல் ஆரோக்கியம்
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் மட்டுமே, உடல் எடையை குறைப்பது சாத்தியம். மேற்கூறிய ஹார்மோன் தொடர்பான பரிசோதனைக்கு பிறகு, குடல் மற்றும் இரைப்பை நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும். அவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவு மாற்றங்கள், ஹார்மோன் சிகிச்சை, போன்றவற்றை எடுத்துக் கொண்டால், உடல் பருமனை குறைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ