கண்களில் தோன்றும் ‘இந்த’ அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

உங்கள் ஆரோக்கியத்தின் நிலையில் உங்கள் கண்களால் அறியலாம். கண்கள் இதயத்தின் நிலையை கூட எடுத்துக் கூறுகின்றன.  நோய்க்கான காரணத்தைக் கண்டறியும் போது மருத்துவர்கள் முதலில் கண்களைப் பார்ப்பதற்கு இதுவே காரணம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2022, 11:27 AM IST
  • உங்கள் கண்கள் உங்கள் உடல்நிலையை எடுத்துக் கூறும்.
  • கண்கள் இதயத்தின் நிலையை கூட எடுத்துக் கூறுகின்றன.
  • இந்த பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்.
கண்களில் தோன்றும் ‘இந்த’ அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்  title=

உங்கள் ஆரோக்கியத்தின் நிலையில் உங்கள் கண்களால் அறியலாம். கண்கள் இதயத்தின் நிலையை கூட எடுத்துக் கூறுகின்றன.  நோய்க்கான காரணத்தைக் கண்டறியும் போது மருத்துவர்கள் முதலில் கண்களைப் பார்ப்பதற்கு இதுவே காரணம். உங்கள் கண்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்களுக்கு பார்ப்பதில் சிரமம், கண் எரிச்சல் அல்லது வலி போன்ற, ஏதேனும் அறிகுறி என்றால், அதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

கண்ணில் நீர் வடிதல்

கண்களில் அதிக நீர் வரும்போது உங்கள் கண்களில் கருப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் தோன்றினால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அது பிரச்சனைஇருப்பதற்கான அறிகுறி. அதாவது, எந்த நிலையிலும் கண் சம்பந்தமான பிரச்சனைகளை லேசாக எடுத்துக் கொள்ள கூடாது.

மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கும் ‘சந்தன எண்ணெய்’; பயன்படுத்தும் எளிய வழிகள்!

 மங்கலான பார்வை

இதைத் தவிர, பார்வை மங்கலாக இருந்தாலும், அதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பல காரணங்களால் மக்கள் மங்கலாக பார்க்க முடியும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். வெளிச்சத்தில் அல்லது இருட்டில் மங்கலாக இருப்பதைக் கண்டால், அதை அலட்சியம் செய்யக்கூடாது.

கண்களில் வறட்சி

கண்களில் வறட்சி ஏற்பட்டாலும், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் கண்களில் வறட்சி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். இரவு வெகுநேரம் வரை உட்கார்ந்து கம்ப்யூட்டர் திரையில் வேலை செய்வது, போனை அதிகம் பயன்படுத்துவது போன்றது.  உடனடியாக மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும்.

கண்களின் வீக்கம்

கண்களில் வீக்கம், கருவளையம் இருந்தாலும் லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல காரணங்களால், கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் போன்ற பிரச்சனை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த காரணங்களை உங்களால் கண்டறிய முடியவில்லை என்றால், உடனடியாக மருத்துவரிடம் காட்டவும்.

மேலும் படிக்க | Health Alert: குளிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News