உங்கள் கால்களை பலவீனமாக்கும் ‘சில’ ஆபத்தான பழக்கங்கள்!

பாதங்கள் மிக முக்கியமான பகுதியாகும். ஆனால் சில தவறான பழக்கவழக்கங்களால் உங்கள் பாதங்களும் பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சில பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2023, 08:31 PM IST
  • கால்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில பழக்கங்கள்.
  • நீண்ட நேரம் உட்காரும் போது கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் வெகுவாக குறையும்.
  • இதன் காரணமாக உங்களுக்கு வெரிகோஸ் வெயின் பிரச்சனை ஏற்படலாம்.
உங்கள் கால்களை பலவீனமாக்கும் ‘சில’ ஆபத்தான பழக்கங்கள்! title=

பாதங்களுக்கான கெட்ட பழக்கங்கள்: பாதங்கள் மிக முக்கியமான பகுதியாகும். ஆனால் சில தவறான பழக்கவழக்கங்களால் உங்கள் பாதங்களும் பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சில பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். கால் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். அதனால் தான் அதனை சரியாக கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதே நேரத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் முழு உடலையும் கவனித்துக் கொண்டாலும், கால்கள் மீது குறைவான கவனம் செலுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி, சில சமயங்களில் சில தவறான பழக்கவழக்கங்களாலும் உங்கள் பாதங்கள் பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், இன்றே நீங்கள் எந்தெந்த பழக்கங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கால்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில பழக்கங்கள் 

அதிக நேரம் உட்காரும் பழக்கம்

தற்போது, இந்த கணிணி உலகில், பெஉம்பாலானோர் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். ஆனால் அது உங்கள் கால்களையும் மிகவும் பலவீனப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் நீண்ட நேரம் உட்காரும் போது கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் வெகுவாக குறையும். இதன் காரணமாக உங்களுக்கு வெரிகோஸ் வெயின் பிரச்சனை ஏற்படலாம். எனவே, உங்கள் கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்யுங்கள். அது தான் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. கால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது . ஆனால், எந்தவித பயிற்சியும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்தே இருப்பது உங்கள் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவிழக்கச் செய்யும். மிக வேகமாக நடப்பது கூட உங்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!

கால் மேல் கால் போடும் பழக்கம் 

இந்த பழக்கம் பெரும்பாலானவர்களிடம் காணப்படும், அவர்கள் எப்போது உட்கார்ந்தாலும், அவர்கள் தங்கள் கால்கள் மீது கால் போட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் நீண்ட நேரம் கால்களைக் குறுக்காக போட்டுக் கொண்டு உட்காருவது, முழங்கால்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் உங்கள் பாதங்களில் பிரச்சனைகள் வரலாம். எனவே கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்காருவதை தவிர்க்கவும்.
  
அதிக உடற்பயிற்சி செய்வது

உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் நீங்கள் அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், அது உங்கள் கால்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உடற்பயிற்சியின் காரணமாக தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுவதே இதற்குக் காரணம். இதனால் பாதங்களில் வலி ஏற்படும்.

வீடுகளுக்குள் முடங்கி இருப்பது

பாத எலும்புகள் மட்டுமல்ல உடலில் உள்ள அனைத்து எலும்புகளும் பலமாக இருப்பதற்கு விட்டமின் டி சத்து முக்கியமானதாகும். அந்த சத்து இல்லை என்றால் நம் எலும்புகள் மெலிந்து விடும். சூரிய வெளிச்சத்தில் நம் உடல் படும்போது தான் அதிகப்படியான விட்டமின் டி சத்து நமக்கு கிடைக்கும். ஆகவே, வீடுகளுக்கு உள்ளேயே நீங்கள் முடங்கியிருக்கும் பட்சத்தில் விட்டமின் டி சத்து உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பை எரிக்கும் ‘சில’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News