Benefits of Cucumber: நாம் தினசரி உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்களிலேயே நம் உடலுக்கு தேவையான பல வித ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இவற்றை நாம் சரியான முறையில் உட்கொண்டாலே ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். ஆரோக்கியமான உணவுகள் பற்றி நாம் நினைக்கும்போது கண்டிப்பாக நம் கண் முன் தோன்றும் விஷயங்களில் வெள்ளரிக்காயும் ஒன்று. வெள்ளரிக்காய் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? இதில் உள்ள சத்துகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரியில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற பல முக்கிய சத்துக்கள் உள்ளன. ஆனால், வெள்ளரிக்காயின் சிறப்பம்சம் அதில் உள்ள ஃபிசெடினின் (Fisetin) மற்றும் அதன் நீர்ச்சத்து. ஃபிசெடினின் நம் உடலுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வெள்ளரிக்காய் பொதுவாக சாலட்டாக உண்ணப்படுகிறது. வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் நம்முடன் பகிர்ந்துள்ளார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரி சாப்பிடுவதால் கிடைக்கும் 6 முக்கிய நன்மைகள்
1. நினைவாற்றல் வலுவடையும்
வெள்ளரிக்காய் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்திற்கும் நல்லதாக கருதப்படுகிறது. வெள்ளரிக்காயில் உள்ள ஃபிசெடின் என்ற தனிமம் ஞாபக சக்தியை (Memory) அதிகரிக்கும். ஞாபக மறதியால் அவதிப்படுபவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இது புத்தியைக் கூர்மையாக்கும். வழக்கமாக மறந்து போகும் விஷயங்களையும், பழைய விஷயங்களையும் நினைவில் கொள்ள வெள்ளரி உதவும்.
2. உடலில் இருந்து நச்சுகள் அகற்றப்படும்
வெள்ளரிக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்க பெரிய அளவில் உதவும். இதில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதன் உதவியுடன் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன (Detox).
மேலும் படிக்க | நீரிழிவு நோய் அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் வேண்டாம்!!
3. செரிமானத்திற்கு உதவும்
வெள்ளரிக்காயில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது உடலில் செரிமான (Digestion) செயல்பாட்டில் உதவியாக இருக்கும். இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
4. புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது
வெள்ளரிக்காயில் லிக்னான்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. அவை கருப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் (Cancer) அபாயத்தைக் குறைக்கின்றன. இதில் குக்குர்பிடாசின்கள் உள்ளன, அவை புற்றுநோய் எதிர்ப்பு கூறுகளாகக் கருதப்படுகின்றன. ஆகையால் வெளரிக்காய் புற்றுநோய் அபாயத்தை குறைக்க பெரிய அளவில் உதவக்கூடும்.
5. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்
வெள்ளரிக்காயை சாப்பிட்டுவிட்டு, பகலில் தண்ணீர் குடிக்க மறந்தாலும் கூட, உடலில் நீர்ச்சத்து (Hydration) குறைபாடு ஏற்படாது என கூறப்படுகின்றது. வெள்ளரிக்காய் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஈடுசெய்கிறது. இது வெப்ப எரிப்பு, தோல் ஒவ்வாமை மற்றும் சூரிய ஒளியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. உஷ்ணத்தால் சரும பிரச்சனைகள் உள்ளவர்களும் வெள்ளரிக்காயை தடவிக்கொள்ளலாம்.
6. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால், உடலில் இருந்து நச்சுகள் வெளியேறி, உடல் அமைப்பு சீராக இயங்கும். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதால் சிறுநீரகம் (Kidney)ஆரோக்கியமாக இருக்கும். வெள்ளரிக்காய் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.
7 எடை இழப்பு
வெள்ளரிக்காய் உட்கொள்வதால் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் (Weight Loss) பெரிய அளவில் உதவி கிடைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது, கலோகளும் மிக குறைவாக உள்ளன. ஆகையால் இது உடல் எடையை குறைப்பதில் அதிகமாக உதவுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஜிம், டயட் இல்லாமலும் ஜம்முனு எடை குறைக்க இந்த மசாலாக்கள் உதவும்: சாப்பிட்டு பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ