International Masters League 2025, Live Streaming Telecast: சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலிஸ், குமார் சங்கக்காரா, யுவராஜ் சிங், கிறிஸ் கெயில், அம்பதி ராயுடு, இர்பான் பதான், யூசப் பதான் உள்ளிட்ட பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் களமிறங்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (International Masters League - IML) இன்று முதல் வரும் மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் முதல் சீசன் இதுவாகும்.
IML 2025: 6 அணிகள் என்னென்ன?
நவி மும்பை, வதோதரா, ராய்ப்பூர் உள்ளிட்ட மூன்று நகரங்களிலும் இந்த தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ், ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ், இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து மாஸ்டர்ஸ், குமார் சங்கக்காரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ், ஜாக் காலிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ், பிரைன் லாரா தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் என ஆறு அணிகள் மோத உள்ளன.
IML 2025: தொடரின் பார்மட்
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா 1 முறை மோதும். 15 லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் இடம் மற்றும் 4ம் இடத்தை பிடிக்கும் அணிகள் முதல் அரையிறுதியிலும், 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது அரையிறுதியிலும் மோதும். மார்ச் 16ஆம் தேதி ராய்ப்பூர் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
#TheBaapsOfCricket #DisneyplusHotstar #ColorsCineplex #ColorsCineplexSuperhits #imloncineplex #imlonhotstar pic.twitter.com/gGA5YyGWKD
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 5, 2025
IML 2025: இன்றைய போட்டி - இந்தியா vs இலங்கை
இந்நிலையில், இன்று நவி மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணியும், குமார் சங்ககாரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன.
IML 2025: ஐஎம்எல் தொடரை நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?
இந்த போட்டி மட்டுமின்றி தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரை தொலைக்காட்சியில் Colors Cineplex, Colors Cineplex Superhits ஆகிய சேனல்களில் காணலாம். ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும், செயலியிலும் நீங்கள் நேரலையில் பார்க்கலாம்.
IML 2025: 6 அணிகளின் முழு ஸ்குவாட்
இந்தியா மாஸ்டர்ஸ்: சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), யுவராஜ் சிங், அம்பதி ராயுடு, யூசுப் பதான், இர்ஃபான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, தவால் குல்கர்னி, வினய் குமார், ஷாபாஸ் நதீம், ராகுல் சர்மா, நமன் ஓஜா, பவன் நேகி, குர்கீரத் சிங் மான், அபிமன்யு மிதுன், சவுரப் திவாரி.
இலங்கை மாஸ்டர்ஸ்: குமார் சங்கக்காரா (கேப்டன்), ரோமேஷ் களுவிதாரண, அஷான் பிரியஞ்சன், உபுல் தரங்கா, நுவான் பிரதீப், லஹிரு திரிமான்னே, சிந்தக ஜயசிங்கா, சீக்குகே பிரசன்னா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதானா, தம்மிக்க பிரசாத், சுரங்க லக்மால், தில்ருவான் பெரேரா, அசேல குணரத்னா, சதுரங்க டி சில்வா
தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ்: ஜாக் காலிஸ் (கேப்டன்), அல்விரோ பீட்டர்சன், ஃபர்ஹான் பெஹார்டியன், ஹாஷிம் ஆம்லா, ஹென்றி டேவிட்ஸ், ஜாக் ருடால்ப், ஜான்டி ரோட்ஸ், வெர்னான் பிலாண்டர், டேன் விலாஸ், மோர்னே வான் விக், எடி லீ, கார்னெட் டி க்ரூகர், மஹான்டி க்ரூகர்
இங்கிலாந்து மாஸ்டர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), இயன் பெல், டேரன் மேடி, டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ், டிம் பிரெஸ்னன், பில் மஸ்டார்ட், டிம் அம்ப்ரோஸ், பாய்ட் ராங்கின், கிறிஸ் ஸ்கோஃபீல்ட், கிறிஸ் ட்ரெம்லெட், ரியான் சைட்பாட்டம், ஸ்டீவ் ஃபின், ஸ்டூவர்ட் மீக்கர், ஜோ டென்லி
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ்: ஷேன் வாட்சன் (கேப்டன்), கால்லம் பெர்குசன், நாதன் ரியர்டன், ஷான் மார்ஷ், பென் கட்டிங், டான் கிறிஸ்டியன், பென் டங்க், பீட்டர் நெவில், பென் ஹில்ஃபென்ஹாஸ், பென் லாஃப்லின், பிரைஸ் மெக்கெய்ன், ஜேம்ஸ் பாட்டின்சன், ஜேசன் க்ரெஜ்ஸா, நாதன் கூல்டர்-நைல், சேவியர் டோஹெர்டி
மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ்: பிரையன் லாரா (கேப்டன்), கிறிஸ் கெயில், கிர்க் எட்வர்ட்ஸ், லென்டில் சிம்மன்ஸ், நர்சிங் தியோனரைன், ஆஷ்லே நர்ஸ், டுவைன் ஸ்மித், சாட்விக் வால்டன், தினேஷ் ராம்டின், வில்லியம்ஸ் பெர்கின்ஸ், பிடல் எட்வர்ட்ஸ், ஜெரோம் டெய்லர், ரவி ராம்பால், சுலைமான் பென், டினோ பெஸ்ட்
மேலும் படிக்க | இந்தியா போராடி வெற்றி; கில் நிதான சதம் - பாகிஸ்தான் போட்டியில் செய்ய வேண்டியது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ