ரிலையன்ஸ் ஜியோநிறுவனம் புதிய அன்லிமிடெட் 5ஜி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இன்று (ஜூன் 27 வியாழக்கிழமை) இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ, புதிய வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டங்களை அறிவித்தது. புதிய சேவைகள் ஜூலை 3 முதல் இந்தியாவில் தொடங்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ 5ஜி
புதிய சேவையான ஜியோ ட்ரூ 5ஜி என்பது உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வேகமான 5ஜி வெளியீடாக இருக்கும். அத்துடன், இந்திய 5ஜி தொழில்நுட்பச் சந்தையிலும் முன்னணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸின் இந்த புதிய அறிமுகம், மேலும் தொழில்துறை கண்டுபிடிப்புகளை உத்வேகப்படுத்தும். 5G மற்றும் AI தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடுகள் செய்வதன் மூலம் நிலையான வளர்ச்சியை இயக்கும். உயர்தரத்தில் விலை குறைவாக கிடைக்கும் இணைய வசதிகள் தான், டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ எப்போதுமே நமது நாட்டையும் வாடிக்கையாளரையும் முதலிடத்தில் வைக்கும், மேலும் இந்தியாவுக்காக தொடர்ந்து முதலீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்கள் அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து கிடைக்கும். நாளொன்றுக்கு 2ஜிபி என்ற திட்டம் உட்பட பல திட்டங்களும் நுகர்வோருக்கு கிடைக்கும். JioBharat மற்றும் JioPhone பயனர்கள் எந்த திருத்தங்களும் அல்லது விலை மாற்றங்களும் இல்லாமல் அதே டேட்டா திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ஜியோ, நாட்டில் தனது முழுமையான True 5G நெட்வொர்க்கை வழங்குகிறது என்றும், இந்தியாவில்செயல்படும் மொத்த 5G செல்களில் 85 சதவிகிதம் ரிலையன்ஸின் ஜியோ நெட்வொர்க்கில் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. 2ஜி நெட்வொர்க்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட 250 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களைப் பற்றியும் ஜியோ அறிந்திருக்கிறது.
ஜியோ தனது முதல் AI மூலம் இயங்கும் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை ஜியோ பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.
JioTranslate என்பது புதிய AI-இயங்கும் பன்மொழி தொடர்பு பயன்பாடாகும், இது அழைப்புகள், குரல் செய்திகள், உரை மற்றும் படங்களை மொழிபெயர்ப்பதில் வாடிக்கையாளர்களுக்கு உதவும்.
ஜியோவின் சப்ஸ்கிரிப்சன்
ஜியோவின் சப்ஸ்கிரிப்ஷன் ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு சில செயலிகளுக்கான அணுகல் இலவசமாக இருக்கும். JioTV, Jio Cinema, Jio Cloud இதில் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ