PM Kisan முக்கிய அப்டேட்: இந்த நாளில் வருகிறது 19வது தவணை, விவசாயிகள் செய்யவேண்டியது இதுதான்

PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியை வழங்குகிறது. இது மூன்று தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2025, 09:39 AM IST
  • பிஎம் கிசான் திட்டம் மூலம் கிடைக்கும் தொகை எவ்வளவு?
  • பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
  • பிஎம் கிசான் யோஜனாவில் எவ்வாறு பதிவு செய்வது?
PM Kisan முக்கிய அப்டேட்: இந்த நாளில் வருகிறது 19வது தவணை, விவசாயிகள் செய்யவேண்டியது இதுதான் title=

PM Kisan Samman Nidhi Yojana: விவசாயம் நமது நாட்டின் ஆதாரமாக உள்ளது. விவசாயிகள் மக்களுக்கு உணவளிக்கும் தெய்வங்களாக போற்றப்படுகிறார்கள். விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் முக்கியமான மற்றும் பிரபலமான திட்டங்களில் ஒன்று பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம்.

PM Kisan: பிஎம் கிசான் திட்டம் மூலம் கிடைக்கும் தொகை எவ்வளவு?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியை வழங்குகிறது. இது மூன்று தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இதுவரை, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், 18 தவணைகளுக்கான தொகை வினியோகிக்கப்பட்டுள்ளது. அடுத்த தவணை, அதாவது 19 ஆம் தவணைக்காக இப்போது லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கிறார்கள். 

PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?

மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிப்ரவரி 24 அன்று தனது பீகார் வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடி பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 19வது தவணையை வெளியிடுவார் என்று அறிவித்தார். மேலும் அன்று அவர் விவசாயத் திட்டங்களில் பங்கேற்று பல மாநில மேம்பாட்டு முயற்சிகளைடும் தொடங்குவார் என கூறப்படுகின்றது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற e-KYC-ஐ நிறைவு செய்வது கட்டாயம் என்பதை பயனாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) யோஜனாவின் 18வது தவணையை அக்டோபர் 15, 2024 அன்று வெளியிட்டார். இது வெளியிடப்பட்டு 4 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த தவணைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

PM Kisan Yojana: பிஎம் கிசான் யோஜனாவில் எவ்வாறு பதிவு செய்வது?

இந்த திட்டத்தில் பதிவு செய்ய, தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, குடியுரிமைச் சான்று, நில உரிமையைக் காட்டும் ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளிப்பதுடன் e-KYC செயல்முறையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

PM-Kisan Samman Nidhi திட்டத்தில் இந்த வழிகளில் பதிவு செய்யலாம்:

- அதிகாரப்பூர்வ PM Kisan போர்டல் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
- பதிவு செய்வதில் உதவி பெற, அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லலாம்.
- மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
- உதவிக்கு உள்ளூர் பட்வாரிகள் அல்லது வருவாய் அதிகாரிகளை அணுகலாம்.

PM Kisan 18வது தவணை நிலையை எவ்வாறு செக் செய்வது?

- முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in -க்கு செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் காட்டப்படும் ஸ்டேடஸ் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.
- உங்கள் மொபைல் எண் அல்லது பதிவு ஐடியைப் பயன்படுத்தி நிலையைச் சரிபார்க்கவும்.
- தேவையான மற்றும் சரியான விவரங்களுடன் திரையில் காட்டப்படும் குறியீட்டை உள்ளிடவும்.
- உங்கள் நிலையைப் பார்க்க “தரவைப் பெறு” டேபைக் கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | LIC: தினமும் ரூ.200 குறைவாக சேமித்து... ஓய்வுகாலத்தில் பெரிய தொகையை பெறலாம்!

மேலும் படிக்க | EPFO Higher Pension: உயர் ஓய்வூதிய விண்ணப்ப நிலையை அறியும் எளிய முறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News