ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது கைக்கு வராமல், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மட்டும் பிடிக்கப்பட்டால் நீங்கள் பதற்றம் அடைய வேண்டாம். இதுகுறித்து உடனடியாக நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் கொடுக்கவும். புகார் கொடுத்த ஏழு வேலை தினங்களுக்குள் மீண்டும் உங்கள் அக்கவுன்ட்டுக்கு பணம் வரவில்லை என்றால், ஆர்பிஐ விதிப்படி தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் என்ற கணக்கில், சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து நீங்கள் இழப்பீடாகப் பெறலாம். 2011 ஆம் ஆண்டு முதல் இந்த விதி நடைமுறையில் உள்ளது.
ஆர்பிஐ விதிமுறை சொல்வது என்ன?
1. கணக்கு வைத்திருக்கும் சொந்த வங்கியின் ஏடிஎம் அல்லது மற்ற வங்கியின் ஏடிஎம் அல்லது ஒயிட் லேபிள் ஏடிஎம் ( White label ATMs) எனப்படும் வங்கி சாராத நிதி நிறுவனங்களின் ஏடிஎம் என எந்த ஏடிஎம்மில் பயன்படுத்தி இருந்தாலும், உடனடியாக இது தொடர்பாக உங்களுக்கு ஏடிஎம் கார்டு கொடுத்த வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும்.
2. ரிசர்வ் வங்கி விதிப்படி, ஏடிஎம் எந்திர பாக்ஸில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள், அவர்களது தொலைபேசி எண்(கள்)/ கட்டணமில்லா பேசும் எண்கள் (Toll free)/ உதவி கோரும் ஹெல்ப் டெஸ்க் (Help Desk) எண்கள் ஆகியவை தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இதேபோன்று ஒயிட் லேபிள் ஏடிஎம்களிலும் புகார் தெரிவிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்/ உதவி கோரும் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
3. ஏடிஎம்மில் பணம் வராமல், அதே சமயம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்பட்டு விட்டால், உங்களுக்கு கார்டு வழங்கிய வங்கி, புகார் பெறப்பட்ட ஏழு வேலை நாள்களுக்குள் அந்தப் பணத்தை மீண்டும் உங்கள் அக்கவுன்ட்டுக்கு கிரெடிட் செய்ய வேண்டும்.
4. அவ்வாறு புகார் அளித்தும், ஏழு வேலை தினங்களுக்குள் உங்கள் பணம், உங்கள் அக்கவுன்டில் மீண்டும் வரவு வைக்கப்படாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் இழப்பீடாக 100 ரூபாய் வீதம் கணக்கிட்டு, அந்தப் பணத்தைச் சம்பந்தப்பட்ட வங்கி, உங்கள் அக்கவுன்டில் கிரெடிட் செய்ய வேண்டும். அதே சமயம், இந்த இழப்பீட்டைப் பெற நீங்கள் உங்கள் புகாரை, உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனை நடந்த 30 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
5. இதையும் மீறி உங்கள் புகாருக்கு உரிய தீர்வை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி தீர்த்து வைக்காமல் போனாலோ அல்லது வங்கியின் நடவடிக்கை உங்களுக்குத் திருப்தி அளிக்காமல் போனாலோ, நீங்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பதில் கிடைத்த 30 தினங்களுக்குள் வங்கி தீர்ப்பாயத்துக்குப் புகார் அளிக்கலாம். ஒருவேளை உங்கள் வங்கி, உங்களுக்கு எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்றாலும், வங்கியிடம் புகார் கொடுத்த 30 தினங்களுக்குள் வங்கி தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கலாம்.
மேலும் படிக்க | வீடு வாங்க பிளான் இருக்கா? இந்த வங்கிகளில் மலிவான வட்டிக்கு ஹோம் லோன் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ