நடுத்தர வர்க்கத்தினருக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.... வரி விதிப்பில் மாற்றம் வருமா?

Budget 2025 Expectations: 2025 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், வருமான வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களை மாற்றுவதன் மூலம் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என தகவல்கள் கூறுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 8, 2025, 10:39 PM IST
  • பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் அறிவிப்பில் வரியை குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?
  • புதிய வரி முறை யின் கீழ் 72% வரி செலுத்துவோர் உள்ளனர்.
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிலையான விலக்கு தொகையை ₹50,000 லிருந்து ₹75,000 ஆக உயர்த்தினார்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.... வரி விதிப்பில் மாற்றம் வருமா? title=

Budget 2025 Expectations: 2025 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், தங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வரும் என நடுத்தர வர்க்கத்தினர் பெரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். வருமான வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களை மாற்றுவதன் மூலம் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என தகவல்கள் கூறுகின்றன. இந்த முறை வரி செலுத்துவோருக்கு நிவாரணம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரி விதிப்பில் மாற்றம் வருமா?

புதிய வரி முறையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விகிதங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின் நோக்கம் நாட்டில் மக்களை செலவு செய்ய ஊக்குவிப்பதாகும்.

72% வரி செலுத்துவோர் புதிய வரி முறையை ஏற்றுக்கொண்டனர்

2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி முறையில் சில வரி விலக்குகள் கிடைக்காது. வருமான வரித்துறையின் தரவுகளின்படி, 72% வரி செலுத்துவோர் இந்த புதிய முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

புதிய வரி முறையின் கீழ் தற்போதைய வரி அடுக்குகள் பின்வருமாறு:

₹0 முதல் ₹3,00,000 வரை: 0%
₹3,00,001 முதல் ₹7,00,000 வரை: 5%
₹7,00,001 முதல் ₹10,00,000 வரை: 10%
₹10,00,001 முதல் ₹12,00,000 வரை: 15%
₹12,00,001 முதல் ₹15,00,000 வரை: 20%
₹15,00,001க்கு மேல்: 30%

கடந்த பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிலையான விலக்கு தொகையை ₹ 50,000 லிருந்து ₹ 75,000 ஆக உயர்த்தினார். இதனுடன், வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

மேலும் படிக்க | Budget 2025: FD வட்டிக்கு புதிய விதிகள், நடுத்தர வர்க்க மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பெரிய பலன்களைப் பெறலாம்

வரவிருக்கும் யூனியன் பட்ஜெட்டில் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால், நடுத்தர வர்க்கத்தினர் பெரிய பலனைப் பெறலாம். உதாரணமாக, 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தின் மீதான குறைந்த வரி விகிதம் லட்சக்கணக்கான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும். இந்த நடவடிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கு பொருளாதார வசதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் செலவு மற்றும் சேமிப்பையும் ஊக்குவிக்கும்.

இருப்பினும், வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் எவ்வளவு நிவாரணம் அளிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கு, இந்த முடிவு பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாக இருக்கும்.

மேலும் படிக்க | EPFO Withdrawal Rules: PF க்ளெய்ம் நிலையை அறிந்து கொள்ளும் எளிய முறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News