Reserve Bank of India: மொபைல் கட்டண முறைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி பணம் செலுத்தும் முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நிகழ்நேர மோசடி கண்காணிப்பு நடவடிக்கை
வங்கி அல்லாத கட்டண அமைப்புகளுடன் தொடர்புடைய ஆபரேட்டர்களும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடவடிக்கைகளைக் கண்டறிந்து எச்சரிக்க நிகழ்நேர மோசடி கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி. மொபைல் பயன்பாடு பயன்படுத்தப்படாவிட்டால், அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே மூடப்படுவதையும், அதன் பிறகு அதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் மீண்டும் லாக் இன் செய்ய வேண்டும் என்பதையும் வங்கி அல்லாத கட்டண அமைப்புகளுடன் (PSOs) தொடர்புடைய ஆபரேட்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இது பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும்.
இந்த மாற்றம் எப்போது அமலுக்கு வரும்?
இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தேவையான இணக்கக் கட்டமைப்பைத் தயாரிக்க PSO -களுக்கு போதுமான நேரத்தை வழங்க வேண்டியதும் அவசியம். இதனால், இதை கட்டம் கட்டமாக செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிந்துரைத்துள்ளது. PSO -களின் கட்டண முறை பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த அறிவுறுத்தல்களின் நோக்கம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதற்காக, சைபர் வலிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து முழுமையான தகவல் பாதுகாப்புத் தயார்நிலைக்கான கட்டமைப்பு வழங்கப்படும் என்று மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதில் வரும் தொழில்நுட்ப மாற்றம் என்ன?
- மொபைல் கட்டணத்தைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் உள்ள போது, என்க்ரிப்ஷன் நெறிமுறையுடன் அங்கீகரிக்கப்பட்ட அமர்வு (Session) அப்படியே இருப்பதை PSO உறுதிப்படுத்த வேண்டும் என்று RBI கூறியுள்ளது.
- ஏதேனும் தலையீடு ஏற்பட்டு, வாடிக்கையாளர் செயலியை மூடினால், செஷன் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பரிவர்த்தனை தீர்க்கப்படும் அல்லது ரீஃபண்ட் அளிக்கப்படும்.
ஆன்லைன் செஷனில் ஆடோ-க்ளோசிங்
மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எந்த செயல்பாடும் இல்லாமல் இருந்தால், மொபைல் செயலியின் ஆன்லைன் செஷன் தானாக மூடப்படுவதையும், செயலியில் பணியை தொடர வாடிக்கையாளர்கள் மீண்டும் லாக் இன் செய்ய வேண்டும் என்பதையும் PSO -க்கள் உறுதிசெய்ய வேண்டும். கார்டில் பரிவர்த்தனை வரம்பு, வங்கி அடையாள எண் (BIN) மற்றும் கார்டு வழங்குபவர் மட்டத்தில் செஷன் க்ளோஷர் அம்சத்தை கார்ட் நெட்வொர்க் வழங்க வேண்டும் என்றும் RBI கூறியுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள், மொபைல் கட்டண பயனர்கள், ஆன்லைன் பேங்கிங் பயனர்கள் என அனைத்து வித வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், அவர்களது பரிமாற்றங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல நடவடிக்கைகளை எடுக்கின்றது. இந்த சமீபத்திய நடவடிக்கையும் பயனர்களின் கட்டண செலுத்தலை எளிதாக்கி பாதுகாப்பை அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ