தொற்று எண்ணிக்கையில் ஏற்றம், கட்டுப்பாடுகளில் தளர்வு: நெதர்லாந்தின் வினோத முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நெதர்லாந்து கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2022, 04:27 PM IST
  • நெதர்லாந்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.
  • நெதர்லாந்து கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது.
  • இது பல கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
தொற்று எண்ணிக்கையில் ஏற்றம், கட்டுப்பாடுகளில் தளர்வு: நெதர்லாந்தின் வினோத முடிவு  title=

ஆம்ஸ்டர்டாம்: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நெதர்லாந்து கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது. கஃபேக்கள், பார்கள் மற்றும் உணவகங்களை இனி இரவு 10 மணி வரை திறந்து வைக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், அங்கு செல்பவர்கள் கொரோனா எதிர்மறை அறிக்கை மற்றும் தடுப்பூசி சான்றிதழைக் காட்ட வேண்டும். 

நெதர்லாந்தில் கொரோனா தொற்று (Coronavirus) எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், அங்குள்ள அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது பல கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. 

ஆபத்து ஆனால் அவசியமான முடிவு

எமது இணை இணையத்தளமான WION இல் வெளியிடப்பட்ட செய்தியின்படி, அரசாங்கம் இரவு விடுதிகளை தற்போதைக்கு மூடியுள்ளது. விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை 1,250 ஆக மட்டுப்படுத்தியுள்ளது. புதிய விதிகள் மார்ச் 8-ம் தேதி வரை அமலில் இருக்கும். 

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே செவ்வாய்கிழமை மாலை கூறுகையில், 'அதிகரிக்கும் நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில், நெதர்லாந்தின் சில இடங்களைத் திறப்பதற்கான ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்து வருகிறோம். இது ஒரு ஆபத்தான முடிவு, ஆனால் அவசியமானது.' என்றார். அதேவேளை இந்த முடிவை நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

ALSO READ | மர்மமான விண்வெளி பொருள் அனுப்பும் சிக்னலால் விஞ்ஞானிகள் குழப்பம்!

ஹாஸ்பிடாலிடி துறை மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது

கொரோனா பரவல் (Corona Spread) மீண்டும் அதிகரித்ததன் காரணமாக, நெதர்லாந்தில் கடந்த ஒரு மாதமாக உணவகங்கள் மற்றும் கலாச்சார இடங்கள் மூடப்பட்டுள்ளன. இது தவிர, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளும் மிகவும் கடுமையானவையாக உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளின் வகுப்புகள் கிட்டத்தட்ட மூடியே இருந்தன. பிரதமர் ஹாஸ்பிடாலிடி துறையின் கோவத்தை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. ஏனெனில், இந்த துறையில் லாக்டவுன் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனவரி 15 ஆம் தேதி முதல் கடைகள், ஜிம்கள், சிகையலங்கார மையங்கள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோர் தங்கள் பணியை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. 

மிக அதிகமாக பரவியது தொற்று 

அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்பாக கடந்த வாரம் அங்கு ஆர்ப்பாட்டமும் ஏற்பட்டது. இருப்பினும், கடுமையான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கையின் அளவு குறையவில்லை. தேசிய சுகாதார நிறுவனம் (RIVM) செவ்வாயன்று, கடந்த வாரம் 51% அதிகரிப்புடன், 3,66,120 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. நெதர்லாந்தின் மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி (Vaccination) செலுத்தப்பட்டுள்ளது. 

ALSO READ | வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகள்! தொடரும் மர்மம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News