Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்களின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவில் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுடான உறவு தொடர்ந்து பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. சீனா சார்பு நிலை கொண்ட மாலத்தீவின் அதிபர் மொஹமத் முய்ஸு (Mohamed Muizzu) 'இந்தியா அவுட்' பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தார். இந்த ஆண்டு ஜனவரியில், உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு சென்றதையடுத்து, இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
மாலத்தீவு தலைவர்கள் இந்தியாவை கேலி செய்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Marendra Modi) எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்தனர். இதனால், இந்தியர்கள் பலர் மாலத்தீவை புறக்கணிக்க முடிவு செய்து, மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்த தங்கள் சுற்றுலா பயணத்தை ரத்து செய்தனர். அதன்பிறகு, மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் சில இந்தியர்கள் மாலத்தீவு நாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர்.
இருப்பினும், தீவிரவாத மனநிலை கொண்டவர்கள் அங்கு மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பதால் சுற்றுலா செல்பவர்களுக்கு மாலத்தீவு பாதுகாப்பானதாக இல்லை என்பதையே, சில சமீபத்திய சம்பவங்கள் மற்றும் பல்வேறு செய்தி அறிக்கைகள் உணர்த்துகின்றன. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், ஹுல்ஹுமலேயில் உள்ள சென்ட்ரல் பார்க் அருகே ஏற்பட்ட சிறு தகராறில் இந்தியாவை சேர்ந்த ஒரு ஜோடி தாக்கப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், மாலத்தீவில் இஸ்ரேலிய பெண் ஒருவர் குறிவைக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Israeli tourist tried to enter one of the islands in the Maldives for a holiday while her country commits genocide. She was kicked out by local island community and last reports indicate she was on her way back to the airport after realizing humanity does not welcome them anymore pic.twitter.com/PsKcUYp9UB
— Muad M Zaki (@muadmzaki) April 30, 2024
மேலும் படிக்க | மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி..!!
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் அடுத்த வாரம் இந்தியா வருகை தர உள்ளார். ஜமீர் இந்தியாவுக்கு வருகை, முய்சு கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு இரு தரப்பிலும் மேற்கொள்ளப்படும் முதல் உயர்மட்ட சுற்றுப்பயணமாக இருக்கும். முய்ஸு ஏற்கனவே சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் இன்னும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை. அவரது வருகை தொடர்பான கோரிக்கை புதுடெல்லியிடம் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலத்தீவு, இந்தியாவிடம் இருந்து பெற்றுள்ள கடனை, திருப்பிச் செலுத்த மேலும் அவகாசம் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து வந்த மாலத்தீவு அரசாங்கங்கள் அவ்வப்போது இந்தியாவிடமிருந்து கடன்களைப் பெற்றுள்ளன. முய்ஸு, அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து, சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவுடன் பாதுகாப்பு உறவுகளிகும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ