இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக கிறிஸ்துமஸ் சமயத்தில் சாண்டா கிளாஸ் மக்களுக்கு பரிசுகளைப் பகிர்ந்து கொடுப்பார். ஆனால் கொரோனா காலத்து சாண்டா கிளாஸ் வைரசை பரப்பியுள்ளார்.
ஆம்!! பெல்ஜியத்தில் கேர் ஹோமில் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாகத் தொடங்கிய ஒரு நிகழ்வு, ஒரு கொரோனா வைரஸ் சூப்பர்ஸ்ப்ரெடர் நிகழ்வாக மாறியது.
ஆண்ட்வெர்பின் ஹெமெல்ரிஜ்க் குடியிருப்பு இல்லத்தில், கிறிஸ்மஸுக்கான கொண்டாட்டங்கள் சற்று முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டன. சாண்டா கிளாஸ் (Santa Claus) உடையணிந்த ஒரு நபர் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பரப்ப அழைக்கப்பட்டார். இருப்பினும், அவர் கொண்டாட்டங்களை விட்டு வெளியேறிய உடனேயே அந்த ஹோமில் இருந்த பலரது உடல்நலம் மோசமடையத் தொடங்கியது.
சாண்டா உடையணிந்து அந்த ஹோமில் இருந்தவர்களை மகிழ்விக்க வந்த அந்த நபருக்கு பின்னர் கொரோனா வைரஸ் (Coronavirus) பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பற்றி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட உடனேயே, அவர்கள் பராமரிப்பு இல்லத்தில் உள்ளவர்களையும் ஊழியர்களையும் பரிசோதிக்கத் தொடங்கினர். இதில் அந்த ஹோமில் இருந்த சுமார் 75 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 14 ஊழியர்களும் அடங்குவர்.
இந்த சம்பவம் மோலில் நடந்தது. அதன் மேயர் விம் கேயர்ஸ் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை ஆராயத் தொடங்கினார். மேலும் "சிறந்த நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு இப்படி தவறான ஒன்றாகிவிட்டது” என்று கூறினார்.
ALSO READ: இன்னும் 24 மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்: ட்ரம்ப்
பராமரிப்பு இல்லத்திற்கு இது ஒரு கருப்பு நாள் என்று கூறிய அவர், "செயிண்ட் நிக்கோலஸாக நடித்த நபருக்கும், அமைப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இது மிகப் பெரிய மன அழுத்தத்தைத் தந்துள்ளது” என்றார்.
உள்ளூர் தகவல்களின்படி, அந்த நபர் அந்த இல்லத்திற்கு வரும் முன்னர், அவருக்கு காய்ச்சல் ஏதும் இல்லை, அவர் தொற்றுக்கான எந்த அறிகுறியையும் (Corona Symptoms) காட்டவில்லை. சாண்டாவின் வருகை 2020 ஆம் ஆண்டின் நிகழ்வுகளால் துவண்டு போயிருந்த பராமரிப்பு இல்லத்தை சற்று உற்சாகப்படுத்தும் என பராமரிப்பு இல்ல அதிகாரிகள் நம்பினர்.
பராமரிப்பு இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் காணப்படுகின்றன. அந்த இல்லத்தின் பல பொதுவான பகுதிகளுக்கு அந்த நபர் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாரிகள், “அங்கு இருந்தவர்களிடமிருந்து சாண்டா விலகியே இருந்ததாகவும், முகக்கவசத்தை (Face Mask) அணிந்திருந்ததாகவும் தெரிவித்தனர். இருப்பினும், ஆன்லைனில் தோன்றிய வீடியோக்கள் சிலர் முகக்கவசங்களை அணியாமல் இருந்ததைக் காட்டுகின்றன.
ALSO READ: COVID-ல் இருந்து மீண்டவர்களை மட்டும் தாக்கும் புதிய கொடிய நோய்..!
இந்த சம்பவம் குறித்து பராமரிப்பு இல்ல அதிகாரிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் விரைவில் அந்த பராமரிப்பு இல்லத்திலிருந்து வரசை வெளியேற்ற உறுதி பூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "நடந்த விஷயத்தால் எங்கள் குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது.
ஆனால் இந்த அதிர்ச்சி, வைரஸை இங்கிருந்து வெளியேற்றுவதற்கான அவர்களுடைய உறுதியை அதிகரித்துள்ளது” என்று பராமரிப்பு இல்லத்தை இயக்கும் நிறுவனமான ஆர்மோனியாவின் செய்தித் தொடர்பாளர் ஜேன்ஸ் வெர்ஹெய்ன் ஒரு உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR