News Tidbits செப்டம்பர் 15: இன்றைய சில முக்கியமான செய்திகள்...

இன்று தூர்தர்ஷன் தினம். இந்தியாவின் தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷன், 1959, செப்டம்பர் 15ஆம் தேதி தனது ஒளிபரப்பைத் தொடங்கியது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 10:46 PM IST
  • எல்லைப் பகுதிகளில் சீனா கேபிள்களை பதிப்பதாக வெளியாகிய செய்திகளை China மறுத்துள்ளது...
  • 2021 முதல் அடுத்த நான்காண்டு காலத்திற்கு இந்தியா, ஐ.நாவின் ECOSOC எனப்படும் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உறுப்பினராக பணியாற்றும்.
  • வெள்ளிக் கிரகத்தில் உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர்
News Tidbits செப்டம்பர் 15: இன்றைய சில முக்கியமான செய்திகள்... title=

புதுடெல்லி: இன்று தூர்தர்ஷன் தினம். இந்தியாவின் தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷன், 1959, செப்டம்பர் 15ஆம் தேதி தனது ஒளிபரப்பைத் தொடங்கியது.

  1. இன்று பொறியாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. 1860ஆம் ஆண்டில் செப்டம்பர் 15ஆம் தேதியன்று பிறந்த இந்தியாவின் மிக முக்கியமான பொறியியலாளர் டாக்டர் விஸ்வேஸ்வரயாவின் நினைவாக, இந்நாள் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 
  2. அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் செலவின வரம்புகள் மசோதா ஆகியவை மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.  
  3. 7 நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி மூலம் இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். நமாமி கங்கே திட்டத்தின் கீழ் 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நதிக்கரை மேம்பாட்டுத்  திட்டங்களையும் பிரதமர் திறந்துவைத்தார்.  
  4. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவான FATFஆசிய-பசிபிக் குழுவின் இரண்டு நாள் காணொளிக் கூட்டம், பயங்கரவாத நிதியுதவி தொடர்பான பாகிஸ்தானின் நடவடிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டது.  தற்போது எஃப்ஏடிஎஃப் அமைப்பின் சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  5. 2021 முதல் அடுத்த நான்காண்டு காலத்திற்கு இந்தியா, ஐ.நாவின் ECOSOC எனப்படும் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உறுப்பினராக பணியாற்றும்.
  6. வெள்ளிக் கிரகத்தில் உயிரினங்கள் இருக்க  வாய்ப்புள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். வெள்ளிக் கிரகத்தின் வளிமண்டலத்தில் “பாஸ்பைன்” வாயு இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.  
  7. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 2020 மே மாதத்திலிருந்து, 16 லட்சம் இந்தியர்கள்  நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.  இந்தத் தகவல்களை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி அவர்கள் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
  8. கடந்த சில மாதங்களாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் போக்குகளுக்கு மத்தியில் எல்லைப் பகுதிகளில் சீனா கேபிள்களை பதிப்பதாக வெளியாகிய செய்திகளை China மறுத்துள்ளது...
  9. ஆம் ஆத்மி கட்சி (AAP) எம்எல்ஏ ராகவ் சத்தா தலைமையிலான குழு நடத்திய விசாரணையைத் தவிர்த்தது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திற்கு "இறுதி எச்சரிக்கையை" வழங்குவதாக சட்டமன்ற குழு கூறியது.
  10. பிரேசிலையும் அமெரிக்காவையும் பின்தள்ளி உலகில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை மீட்டெடுத்துள்ளது இந்தியா... 

Read Also | SBI to change cash withdrawal rules from September 18, details here

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News