உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில், 280 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மனச்சோர்வு அல்லது பதட்டத்திற்கான ஆரம்ப மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவருக்கு வேலை செய்யும் மருந்து, மற்றொருவருக்கு வேலை செய்யாமல் இருக்கலாம். மனச்சோர்வு மற்றும் ஆண்டிடிரஸன்ட் போன்ற மனநலப் பிரச்சினைகள் விஷயத்தில் இது மிகவும் சாத்தியமான விஷயமாக இருக்கிறது.ஒரு நபரின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய இந்த மருந்துகளை பயன்படுத்தினால், கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
மருந்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்கவும், மருந்துகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்யவும், செயற்கை நுண்ணறிவு உதவுகிறது என்ற ஆச்சரியமான அறிவியல் கண்டுபிடிப்பு வெளியாகி அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஒரு இஸ்ரேலிய சுகாதார-தொழில்நுட்ப நிறுவனம், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு ஆண்டிடிப்ரஸண்ட் (antidepressants) என்று சொல்லப்படும் மனசோர்வுக்கான மருந்துகளை துல்லியமாக பரிந்துரைக்கிறது.
உலகளவில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மனச்சோர்வு அல்லது பதட்டத்திற்கான ஆரம்ப மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம் எனஉலக சுகாதார அமைப்பு கூறுவதன் அடிப்படையில் பார்த்தால், இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் விளங்கும்.
மேலும் படிக்க | Elon Musk: ரகசியமாக AI நிறுவனத்தை உருவாக்கிய எலோன் மஸ்க்..! சாட்ஜிபிடி கலக்கம்
புதுமையான AI- அடிப்படையிலான தொழில்நுட்பம் நோயாளிகளின் இரத்த மாதிரிகளிலிருந்து உருவாக்கப்பட்ட மூளை செல்களைப் பயன்படுத்துகிறது, பின்னர் அவை பல்வேறு ஆண்டிடிப்ரசண்டுளை பயன்படுத்தும்போது பயோமார்க்ஸர்களுக்காக சோதிக்கப்படுகின்றன.
ஜெனிடிகா+ நிறுவனம் நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் மரபணு தரவுகளை பகுப்பாய்வு செய்து மருத்துவர் பரிந்துரைப்பதற்கான சிறந்த மருந்தையும் சரியான அளவையும் தீர்மானிக்கிறது. இது தொடர்பான AI அடிப்படையிலான தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்படுகிறது. இது, 2024 இல் வணிக ரீதியாக தொடங்கப்பட உள்ளது என்று பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனிடிகா+ நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஐரோப்பிய கண்டுபிடிப்பு கவுன்சிலில் இருந்து நிதியுதவி பெற்று செயல்படும் நிறுவனம் என்பதும், துல்லியமான மருந்துகளை உருவாக்க மருந்து நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"சமீபத்திய கணினி தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்று, வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்வதற்கான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்," என்று ஜெனிட்டிகா+ இன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் கோஹன் சோலால் கூறுகிறார்.
மேலும், எந்த மருந்துகள் ஒருவருக்கு ஒத்துப் போகும், குறிப்பிட்ட நோயாளிக்கு பக்கவிளைவுகள் ஏதுமின்றி, சிகிச்சையளிக்க உதவும் என்ற "மர்மத்தைத் தீர்க்க" AI உதவும் என்று விஞ்ஞானி டாக்டர் கோஹன் சோலால் கூறுகிறார்.
உலகளாவிய மருந்துத் துறையை மாற்ற AIக்கான சாத்தியம் மிகப்பெரியது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பயோமெடிக்கல் AI மற்றும் தரவு அறிவியலின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஹெபா சைலம் கருதுகிறார்.
மேலும் படிக்க | Bizarre! கொரோனாவால் 'இறந்த' நபர்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ