Chennai Rain Updates: சென்னை தற்போது காலையில் பெருநகரப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கவலையடைந்துள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அந்த இடங்களில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்குவதற்காக சித்தா துறையையும் களத்தில் இருக்க வேண்டும் என்றும் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் மட்டும் களத்தில் இருப்பதாகவும், மற்ற அமைச்சர்கள் எங்கே என்று தெரியவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
Chennai Rain: வடகிழக்கு பருவ மழை நேற்று முதல் தொடர்ந்து பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட அதிக மழை பெய்யவில்லை.
Free Food Distribution Amma Unavagam: கனமழை எதிரொலியாக அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவுகள் வழங்கப்படும்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பம்மல் காந்தி ரோடு பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளதாக பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த நிலையில், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஆவின் பால் வாகனம் பழுதாகி நின்றதால் பல்வேறு இடங்களுக்கு ஆவின் பால் செல்ல முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 12,000 பால் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு சென்ற ஆவின் பால் வாகனம் ஓஎம்ஆர் சாலை ஒக்கியம்பேட்டையில் பழுதாகி நின்றது.
சென்னை நாவலூர் பகுதியில் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி. அங்கங்கே பள்ளம் உள்ளதால் மக்கள் பீதியுடன் நடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். ஒரு சிலர் வாகனங்கள் பழுதடைந்து அங்கங்கே நிற்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.