பம்மல் காந்தி ரோடு பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளதாக பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த நிலையில், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஆவின் பால் வாகனம் பழுதாகி நின்றதால் பல்வேறு இடங்களுக்கு ஆவின் பால் செல்ல முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 12,000 பால் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு சென்ற ஆவின் பால் வாகனம் ஓஎம்ஆர் சாலை ஒக்கியம்பேட்டையில் பழுதாகி நின்றது.
சென்னை நாவலூர் பகுதியில் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி. அங்கங்கே பள்ளம் உள்ளதால் மக்கள் பீதியுடன் நடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். ஒரு சிலர் வாகனங்கள் பழுதடைந்து அங்கங்கே நிற்கின்றன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை அக். 16 விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தியாகராயநகரில், தி. நகரில் மேம்பால வேலைகள் நடந்து வரும் நிலையில், மேட்லி சாலை, தொடங்கி தி.நகர் பஸ் டிப்போ,சவுத் உஸ்மான் சாலை, கண்ணம்மா பேட்டை செல்லும் சாலை வரை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது,
கன மழை காரணமாக சென்னை தியாகராய நகர் பர்கித் சாலையில் ராட்சத மரம் வீடுகளின் மேல் விழுந்தது; விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மரத்தை அகற்றினர்; வீடுகளின் மேல் விழுந்த மரம் விரைந்து அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரடைந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை மற்றும் அதீத கனமழை இருப்பதால் இன்று ஆரஞ் அலர்ட், நாளை ரெட் அலர்ட் மற்றும் நாளை மறுநாள் ஆரஞ் அலர்ட் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Chennai Rains Latest News Updates: சென்னையில் நேற்றிரவும், இன்று காலையிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், சென்னையின் பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் நிலை என்ன என்பதை இதில் விரிவாக காணலாம்.
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது பார்க்கலாம்?
Chennai Rain Latest News Updates: தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் பால் உள்ளிட்ட அத்தியாவச பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நகரமே பரபரப்பான நிலையில் காணப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.