மக்களே ஜாக்கிரதை! இந்த 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

Chennai Rain: இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்கடக மாறியது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

 

1 /6

சென்னையில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிக கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ரெட் அலர்ட் விடப்பட்டு இருந்தது.  

2 /6

இந்நிலையில் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

3 /6

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

4 /6

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

5 /6

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

6 /6

எனவே இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசும் உதவிக்காக தயார் நிலையில் உள்ளது.