True Caller Tips: ட்ரூ காலர் செயலியில் உங்கள் மொபைல் எண்ணை நீக்குவது எப்படி?

ட்ரூகாலர் என்பது உங்கள் மொபைல் தொடர்பில் இல்லாத ஒருவர் உங்களுக்கு அழைக்கும்போது அவரின் பெயர் மற்றும் புகைப்படத்தைக்கூட காட்டும் செயலி. ஒருவேளை இந்த செயலியில் உங்கள் மொபைல் எண் சேர்க்கப்பட்டிருந்தால் அதனை முழுவதுமாக நீக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 27, 2024, 07:31 PM IST
  • ட்ரூ காலரில் இருந்து மொபைல் எண்ணை நீக்க வேண்டுமா?
  • உங்களின் டேட்டா பாதுகாப்பு குறித்து கவலை வேண்டாம்
  • தகவலை நீக்க நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதுதான்
True Caller Tips: ட்ரூ காலர் செயலியில் உங்கள் மொபைல் எண்ணை நீக்குவது எப்படி? title=

ட்ரூ காலர் செயலி மிகவும் பிரபலமான அழைப்பு செயலி ஆகும். உங்கள் தொடர்பில் இல்லாதவர்கள் யார் அழைத்தாலும் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தைக் கூட காட்டும் செயலி தான் இது. இந்த செயலியை பெரும்பாலும் எல்லோரும் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், உங்கள் மொபைல் எண்ணை சேமித்து வைத்திருக்கும் யாரோ ஒருவர் பயன்படுத்தினால் கூட ட்ரூகாலரில் உங்களைப் பற்றிய டேட்டா இருக்கும். 

அது உங்களுக்கான பிரைவசி ஆபத்து என கருதினால், ட்ரூகாலரில் இருந்து உங்களுடைய மொபைல் எண்ணை முழுவதுமாக நீக்க முடியும். யூசர்களின் பிரைவசியைக் கருத்தில் கொண்டு Truecaller அதன் டேட்டா சென்டரிலிருந்து உங்கள் போன் எண்ணை அகற்றுவதற்கான ஆப்சனை வழங்குகிறது. இருப்பினும், இதற்கு உங்கள் Truecaller கணக்கையும் நீங்கள் நிரந்தரமாக நீக்க வேண்டும்.

மேலும் படிக்க | தொலைந்த ஆதார் கார்டு உடனடியாக பெறுவது எப்படி? டெக் டிப்ஸ்

ட்ரூகாலர் கணக்கை நீக்குவது எப்படி?

1. உங்கள் மொபைல் சாதனத்தில் Truecaller செயலியை திறக்கவும்.
2. ஸ்கிரீன் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகள் அல்லது கியர் ஐகானைத் கிளிக் செய்யவும்.
3. 'Settings' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Privacy center' செல்லவும்.
4. அங்கு 'Deactivate' பட்டனை கிளிக் செய்யவும்.
5. இப்போது ஸ்கிரீனில் கேட்கும் எஸ் என்பதை மீண்டும் கிளிக் செய்தால் உங்கள் கணக்கு டி ஆக்டிவேட் ஆகும்.

ட்ரூகாலரில் இருந்து உங்கள் தொலைபேசி எண்ணை அகற்றுவது எப்படி?

1. ஏதேனும் ஒரு பிரவுசரை பயன்படுத்தி https://www.truecaller.com/unlisting - தளத்துக்கு செல்லவும்
2. இந்தியாவின் மொபைல் குறியீடான 91 -ஐ அழுத்தி, மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
3. 'அன்லிஸ்ட் ஃபோன் நம்பர்' பட்டனை கிளிக் செய்யவும்.

இந்தப் வழிகளை பின்பற்றினால், உங்கள் Truecaller கணக்கு செயலிழக்கப்படும். உங்கள் தொலைபேசி எண் ட்ரூகாலர் டேட்டா சென்டரில் இருந்தும் நீக்கப்படும்.

மேலும் படிக்க | உச்சம் தொட்ட Raider 125... 7 லட்சத்திற்கும் மேல் விற்பனை - ஓரம்போன Apache!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News