iPhone SE 4 ... ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன் நாளை அறிமுகம்... லேடஸ்ட் அப்டேட் இதோ

ஆப்பிளின் பட்ஜெட் போன் மாடலான iPhone SE 4 எப்போது அறிமுகமாகும் என பலர் ஆவலில் உள்ள நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2025, 02:32 PM IST
  • ஆப்பிளின் வரவிருக்கும் அறிமுக நிகழ்வின் விவரங்கள்
  • ஆப்பிளின் நான்காவது தலைமுறை iPhone SE எப்போது அறிமுகமாகும்?
  • புதிய ஆப்பிள் ஐபோன் SE 4 போனின் விலை, அம்சங்கள், கேமரா மற்றும் பிற விவரங்கள்.
iPhone SE 4 ... ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன் நாளை அறிமுகம்... லேடஸ்ட் அப்டேட் இதோ title=

பிரீமியம் போன்களில் முதலிடம் வகிக்கும் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் வைத்திருப்பது கவுரவத்தை கொடுக்கும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். எனினும், ஐபோன்களின் விலை மிகவும் அதிகம் இருப்பதால் பலருக்கு எட்டாத கனவாகவே இருக்கும். 

ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் போன்

பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் ஆப்பிள் பட்ஜெட் விலையில், தனது புதிய iPhone SE வகை போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆப்பிளின் நான்காவது தலைமுறை iPhone SE எப்போது அறிமுகமாகும் என பலர் ஆவலில் உள்ள நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.

iPhone SE 4 அறிமுக நிகழ்வு 

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone SE 4 அறிமுக நிகழ்வு பிப்ரவரி 19 அன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்நிகழ்ச்சியில் நிறுவனம் தனது பிற லேடஸ்ட் போன்களையும் (Smartphones) அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் ஐபோன் SE 4 விரைவில் சந்தையில் நுழையப் போகிறது என்று யூகங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், புதிய ஆப்பிள் ஐபோன் SE 4 போனின் விலை, அம்சங்கள், கேமரா மற்றும் பிற விவரங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்:

iPhone SE4 போன் கேமரா

ஆப்பிளின் வரவிருக்கும் மாடல் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கக் கூடும். புதிய வடிவமைப்பு, பெரிய 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்ட இந்த போனில், சிறந்த வகையில் புகைப்படம் - வீடியோ ஆகியவற்றை திறன்பட எடுக்க ஏதுவாக, 48 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டிருக்கலாம். ஐபோன் SE 4 நிறுவனத்தின் வரிசையில் கேம்-சேஞ்சரகா இருக்கும் என யூகங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிளின் போன் அறிமுக நிகழ்வின் விவரங்கள்

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், பிப்ரவரி 19, 2025 அன்று போன் அறிமுகமாகும் என அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு 10 AM PT (11:30 PM IST) மணிக்குத் தொடங்கும். கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் இருந்து இதை நேரடியாக ஒளிபரப்பலாம். iPhone SE 4 தவிர, Apple MacBook Air M4 ஐ அறிமுகப்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

iPhone SE 4 இன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஆப்பிள் SE தொடரில் தனித்துவமான வடிவமைப்பைக் காணலாம். புதிய iPhone SE 4 இன் தோற்றம் iPhone 14 போன்று இருக்கலாம். ஃபேஸ் ஐடி, மெல்லிய பெசல்கள் மற்றும் ஹோம் பட்டன் எதுவும் இதில் காணப்படாது. மேம்படுத்தப்பட்ட 48 மெகாபிக்சல் கேமரா இருக்கலாம். முந்தைய 12 மெகாபிக்சல் கேமராவை விட இது மிகவும் சிறப்பாக இருக்கும். வரவிருக்கும் ஐபோனில் A18 சிப்செட் பொருத்தப்பட்டிருக்க கூடும். ஐபோன் 16 தொடர் செயலியைப் பயன்படுத்தலாம். ஆப்பிளின் AI- பொருத்தப்பட்ட அம்சங்களை ஆதரிக்கும் அம்சங்கள் இருக்கலாம்.

மேலும் படிக்க | புதிய UPI பரிவர்த்தனை விதிகள்... பிப்ரவரி 15 முதல் அமல்படுத்தியுள்ள NPCI

இந்தியா, அமெரிக்கா மற்றும் துபாயில் iPhone SE 4 விலை

நிறுவனம் அதன்அறிமுகம் அல்லது விலை தொடர்பான எந்த புதுப்பிப்புகளையும் பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும், ஐபோன் SE 4 மாடலின் விலை நாடுகளை பொறுத்து மாறுபடலாம். இந்தியாவில் வரவிருக்கும் ஐபோனின் விலை சுமார் ரூ. 50,000 ஆக இருக்கலாம், அமெரிக்காவில் $500க்கும் குறைவாக இருக்கலாம் (சுமார் ரூ. 43,477). துபாயில் இதன் எதிர்பார்க்கப்படும் விலை AED 2,000 (சுமார் ரூ. 47,359) ஆக இருக்கும். முன்கூட்டிய ஆர்டர் செய்பவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் சிறப்பு தள்ளுபடியையும் வழங்க முடியும்.

மேலும் படிக்க | Reliance Jio Airfiber... 599 ரூபாயில் 1000 GBயுடன் 12 OTT சேனல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News