Coimbatore Latest News: கோவை மாவட்டம் காரமடை பெள்ளாதி ரோடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது இரண்டாவது மகள் ரம்யா. இவர் சென்னையில் தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருமுல்லை வாயிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியரான இருவரும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த தம்பதியினரின் ஏழு மாத கைக் குழந்தை அவர்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து பால்கனி வழியாக தவறி விழுந்து கீழ் தளத்தின் கூரையில் சிக்கிய நிலையில் அருகில் இருந்தவர்கள் போராடி பத்திரமாக மீட்டனர்.
மன அழுத்தத்தில் இருந்த தாய்
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல்களும், வீடியோவும் பேஸ்புக் மற்றும் யூ-ட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அந்த குழந்தையின் தாய் ரம்யா குறித்து கமென்ட்ஸ்களில் மிக மோசமான நிலையில் கருத்து தெரிவித்து பலரும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மிகவும் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு வந்த ரம்யாவுக்கு இந்த கருத்துக்கள் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் மனநல சிகிச்சையும் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளி
சொந்த ஊரில் தற்கொலை
இருப்பினும் அதில் இருந்த மீண்டு வர இயலாமல் மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டு ரம்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து ரம்யா தனது சொந்த ஊரான கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
அங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று மாலை ரம்யாவின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிக்கு வெளியே சென்ற நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்த ரம்யா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வெளியில் சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்து போது ரம்யா தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களின் மூலம் நடைபெறும் இதுபோன்ற அத்துமீறல்கள் பல பேரின் வாழ்வில் பெரும் துயரங்களை ஏற்படுத்துகின்றது எனலாம். அத்துமீறிய கருத்துக்களால் தனிமனித வாழ்க்கை மிகவும் சீரழிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடரும் துயரங்கள்
சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட மோசமான மற்றும் அத்தமீறிய கருத்துகளால் ரம்யாவின் உயிரிபிரிந்திருப்பது நம் வருந்தக்க விஷயமாகும். யார் என்றே தெரியாதாவர்கள் என்பதால் கண்மூடித்தனமாக வார்த்தைகளால் தாக்குவதும், மோசமான சொற்களை பிரயோகிப்பதும் சரியானதில்லை என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சில நாள்களுக்கு முன் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர்சிபி கட்சிக்கு ஆதரவாக பேசிய ஒரு சாதாரண பெண்மணியை சமூகவலைதளங்களில் பலரும் மோசமான கருத்துகளால் வசைப்பாடியது அவரை தற்கொலைக்கு தூண்டியது. இந்த காலகட்டத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து வருவது
(தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)
மேலும் படிக்க | ஆண்களே உஷார்...! டேட்டிங் செய்யும் ஆண்களுக்கு விரிக்கப்படும் வலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ