அதிமுக சார்பாக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் சொல்லப்பா கூறுகையில்: இந்த அடையாள அட்டை மூலம் பணம் வருமா என கேட்டார்கள் 2026ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பணம் மட்டுமல்ல தாலிக்கு தங்கம் முதல் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கும். முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு, முதலீடுகளை ஈற்பதற்காக முதல்வர் வெளிநாடு செல்வதாக தகவல்கள் வந்துள்ளது. அவர் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, திரைப்பட சூட்டிங்காக சென்று இருக்கிறார் என்று மக்கள் சொல்கிறார்கள்.
மேலும் படிக்க | சிஎஸ்கேவின் இந்த 3 சிங்கங்கள்... மெகா ஏலத்தில் கேகேஆர் கொக்கிக் போட்டு தூக்கும்!
முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிமுறைகளுடன் அவர் செல்லவில்லை. ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற நிறுவனங்களில் தான் ஒப்பந்தம் செய்துள்ளார்களே தவிர புதிதாக இந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யவில்லை. மதுரை வடபழஞ்சியில் உள்ள எல்காட்டிற்கு 50 கோடி ரூபாய் நிதி இருப்பதற்காக அவர் வெளிநாடு சென்று இருப்பது வினோதமாக உள்ளது. வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியது போல தான் இந்த சுற்றுப்பயணத்தை மக்கள் கருதுகிறார்கள். மத்திய அரசு கல்வி நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, நிதியைப் பெறுவதற்காக தான் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறார்கள். ஏற்கனவே தமிழகத்திற்கு எந்த தேசிய கட்சிகளும் திட்டங்களை கொடுப்பதில்லை. இரு மொழிக் கொள்கையை விட்டு திமுக தாண்ட முடியுமா, அதிமுகவை போல தான் திமுகவும் இருந்தாக வேண்டும்.
இல்லையென்றால் அவர்கள் அடித்தளமே கவிழ்ந்து விடும். முதல்வர் எப்போதும் பாஜகவை எதிர்க்க மாட்டார் கீழ் இருப்பவர்கள் வேண்டுமென்றால் சொல்வார்கள். முதல்வர் இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறாரே தவிர கண்டித்திருக்கிறாரா. மத்திய அரசு அவர்கள் சொல்கின்ற திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிற வழிமுறையில் தான் இருக்கிறார்கள். பிரதமர் இவர்களுக்கு எதுவும் நிபந்தனையிட்டு இருக்கலாம் அவை முழுமையாக நிறைவேற்றப்பட்ட பிறகு இணைந்து செயல்படுவார்கள். கார் பந்தயம் குறித்த கேள்விக்கு, எது நடந்தாலும் வாழ்த்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையின் அடிப்படை காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கூட்டணி கட்சியில் உள்ள சில பேருக்கு வாழ்த்துகிறதை தவிர வேறு வேலை இல்லை.
உதயநிதி அமைச்சர் மட்டும் இல்லை நடிகரும் கூட அதனால் சக நடிகரா நடிகர்கள் வாழ்த்துகிறார்கள் அவரும் நடித்துக் கொண்டிருக்கிறார் திரைத்துறையில் நடிப்பது என்பது வேறு மக்கள் பிரச்சனை என்பது வேறு நடிகர்களை ஒரு அளவுக்கு தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எம்ஜிஆரை தவிர எந்த நடிகரையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெகத்ரட்சகன் அபராதம் குறித்த கேள்விக்கு, ஜெகத்ரட்சகனுக்கு 800 கோடி அபராதம் ஸ்டாலின் 800 கோடியை தான் அமெரிக்காவிலிருந்து கொண்டு வருகிறார். இது அமலாக்கத்துறை எடுத்து இருக்கும் நடவடிக்கை. திமுகவில் உள்ள பெரிய தலைவர்கள் அனைவருமே மிகப்பெரிய அதிபதிகள் தான் என கூறினார்.
விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதை எளிதில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற அமைச்சர் மூர்த்தி பேசியது குறித்து, அவர் என்ன வேலை செய்கிறார் மதுரையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் என்ன திட்டங்களை மதுரைக்கு கொண்டு வந்தார்கள்? அவர் அமெரிக்காவுக்கு சென்றே 50 கோடி தான் கொண்டு வந்திருக்கிறார். நகராட்சித் துறை அமைச்சர் அறிவித்தும் இந்த தொகுதியில் கூட பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. ரோப் கார் வசதி அறிவித்தும் நடைமுறைப்படுத்தவில்லை, எல்லா திட்டங்களும் அறிவிப்பு மட்டுமே இருக்கிறது தவிர நடைமுறைப்படுத்தவில்லை. மதுரை எய்ம்ஸ் கூட 2026 அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு எடப்பாடி யார் முதலமைச்சர் ஆன பிறகு தான் திறப்பு விழா நடைபெறும் என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ