பார்ப்பதற்கும் பேசுவதற்கும் வசீகரமான 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?

Top 5 Attractive Zodiac Signs : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் அழகானவர்களாக இருப்பார்கள், அந்த ராசிகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Jan 31, 2025, 09:06 PM IST
  • அழகான 5 ராசிகள்..
  • நல்ல குணாதிசயம் இருக்கும்..
  • யார் யார் தெரியுமா?
பார்ப்பதற்கும் பேசுவதற்கும் வசீகரமான 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?  title=

Top 5 Attractive Zodiac Signs : ஒரு மனிதரை எடுத்துக் கொண்டோம் என்றால் அவரிடம் அழகாக இருப்பது வெறும் முகம் மட்டுமல்ல. அவரது தன்னம்பிக்கை, குணாதிசயம், பிறரிடம் பேசும் விதம் என பல விஷயங்கள் வசீகரமானதாக இருக்கும். இந்த விஷயங்கள் ஒரு சில ராசிக்காரர்களிடம் மிக எளிதாகவே இருக்கும். அப்படிப்பட்ட 5 ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

மேஷம்: 

மேஷ ராசியை கொண்டவர்கள், துணிச்சலுடன் எதையும் சந்திக்கும் மனம் படைத்தவர்களாக இருப்பர். இவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு இருக்கும் வெளிச்சமாக இருப்பார்களாம். வாழ்க்கையில் இருக்கும் சாகசத்தை விரும்பும் இவர்கள், இவர்களை சுற்றி இருப்பவர்களாலும் விரும்பப்படுவார்கள். இவர்கள் அருகில் இருந்தால் பிறருக்கும் இதே போன்ற குணாதிசயம் பரவுமாம். இதனால் இவருடன் இருக்க பலர் விரும்புவர் என கூறப்படுகிறது.

ரிஷபம்: 

ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் நடந்தால் கூட அதில் அழகு இருக்கும் என கூறப்படுகிறது. அன்பு மற்றும் அக்கறை கொண்ட குணாதிசயம் படைத்தவர்களாக இருக்கும் இவர்கள், தன்னை சுற்றி அழகாக இருக்கும் விஷயங்களையும் படம் பிடிக்க தவறாதவர்களாக இருப்பார்களாம். தனக்கு வாழ்வில் கிடைத்த அனைத்து மனிதர்களுக்கும் விஷயங்களுக்கும் நன்றி உணர்வுடன் இருக்கும் இவர்கள், அதை பாதுகாத்துக் கொள்வதற்காக எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்வார்களாம். இது மத்தியில் இந்த ராசிக்காரர்கள் இடம் பிடித்த குணாதிசயமாக உள்ளது. அதுமட்டுமல்ல, இவர்களை சுற்றி இருப்பவர்கள் கூட பல சமயங்களில் இவர் போலவே மாறிவிடுவார்களாம்.

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களிடம் ஒருவித அழகான மர்மம் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் செயல், பேச்சு என அனைத்திலும் ஒருவித தெளிவும் பிறரின் ஆர்வத்தை தூண்டும் தன்மையும் இருக்குமாம். இவர்களிடம் இப்படி நினைத்திருக்கும் மர்மமான குணாதிசயமும், தளராத மன தைரியமும் பிறரை கவரும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்மம்: 

இயல்பாகவே மன தைரியம் படைத்த ராசிக்காரர்கள் ஆக இருக்கின்றனர் சிம்ம ராசிக்காரர்கள். இவர்களிடம் இருக்கும் இந்த மன உறுதி பிறரை காந்தம் போல கவரும் கவர்ச்சி உடையதாக இருக்கும் என கூறப்படுகிறது. இவர்கள் பேசினாலே அது ஆணையிடுவது போல இருப்பதாக பிறர் நினைப்பராம். இருப்பினும் அவர்கள் இவர்களின் பேச்சைக் கேட்க ஈர்க்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் இவர்களிடம் இருக்கும் விளக்க முடியாத காந்த சக்தி. பல சமயங்களில் பிறரை கவரும் வகையில் இவர்களுக்கு நகைச்சுவையாக கூட பேச தெரியுமாம்.

மீனம்: 

மீன ராசிக்காரர்கள் தங்கள் போக்கில் வாழ்க்கை மாற்றாமல் வாழ்க்கை போகும் போக்கில் தங்களை மாற்றிக் கொள்வார்களாம். தண்ணீர் அது இருக்கும் பாத்திரத்தை போல தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும், இதுபோன்ற குணாதிசயம் படைத்தவர்கள் மீன ராசிக்காரர்கள். என்ன விஷயத்தையும் பெரிதாக மனதிற்கும் உழைக்கும் எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருக்க மட்டும் பெரும்பாலும் முயற்சிப்பார்களாம். இவர்களுடன் இருப்பவர்களுக்கும் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்றும் கற்றுக் கொடுப்பார்களாம். அதுமட்டுமன்றி வெளிப்படையாக இருக்கும் இவர்களின் குணாதிசயம் பிறரை கவரவல்லது.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைககளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | இந்த 5 ராசிகளை கொண்ட பெண்கள் கணவர்களுக்கு அதிக அதிர்ஷ்டத்தை கொடுப்பார்கள்!

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்கள் உண்மையில் புத்திசாலி ஆனால் வெற்றிபெற மிகவும் சோம்பேறி!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News