மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், எந்தெந்த பொருட்களின் விலை உயர மற்றும் குறைய வாய்ப்பு என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை இன்று (பிப்ரவரி 01) தாக்கல் செய்ய இருக்கிறார். இது அவர் செய்யும் 8வது மத்திய பட்ஜெட் ஆகும்.
இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்க வரி நிவாரணத்தை பொருளாதார வளர்ச்சி தேவைகளுடன் சமநிலைப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: Union Budget 2025 | மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்! என்னென்ன மாற்றங்கள்?
நேற்று (ஜனவரி 31) பிரதமர் மோடி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு உரையாற்றிய அவர், இன்னோவேஷன், இன்கிளுஷன் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட் பற்றியதாக இந்த பட்ஜெட் இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
கடந்த 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொபைல் போன்கள், சோலார் உபகரணங்கள், சில கடல் பொருட்கள் மற்றும் தாதுக்களின் விலைகள் குறைவானது. மற்றொரு பக்கம் அம்மோனியம் நைட்ரேட், பிளாஸ்டிக் மற்றும் தொலைத் தொடர்பு உபகரணங்களின் விலை உயர்ந்தது.
2025 - 2026 எதிர்பார்ப்புகள்
விலை குறைய வாய்ப்பு: இந்த ஆண்டு பட்ஜெட்டில் எலக்ட்ரானிக்ஸ், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, தங்கம் மற்றும் வெள்ளி, எலக்டிரிக் கார்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் மருந்துக்களின் விலை குறையாலாம் என எதிர்ப்பார்க்கலாம். வரிச் சலுகை அறிவிக்கப்படும் நிலையில், இதுபோன்ற அனைத்து பொருட்களின் விலையும் குறையும்.
விலை உயர வாய்ப்பு: இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ சாதனங்கள், இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகள், சிகரெட், செமிகண்டக்டர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என எதிர்பார்க்கலாம்.
தற்போது அதிகரித்து வரும் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களால் பலரும் அவதிபட்டு வருகின்றனர். இதற்கு தொழில்நுட்ப முன்னேற்றமும் உள்கட்டமைப்பு செலவுகளுமே காரணம் என தொழில்த் தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிமக் கட்டணம் மற்றும் உலகளாவிய சேவை கடமைக் நிதியைக் குறைக்க கோரிக்கை எழுந்துள்ளன.
மேலும் படிங்க: பட்ஜெட்டுக்கு முன் வந்த குட் நியூஸ்: LPG சிலிண்டர் விலை குறைந்தது, லேட்டஸ் விலை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ