Kallakurichi hooch tragedy: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதவிர 100க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் நேரடியாக கள்ளக்குறிச்சி கருனாபுரம் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்தனர். அத்துடன் நிவாரணங்களையும் அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை அறிவித்து, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையிலே இன்றைய தினம் தமிழக முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், தேமுதிக சார்பில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து, திமுகவின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டங்களானது அந்தந்த தலைநகரங்களில் நடைபெற்றது.
மேலும் படிக்க | கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?
அந்த வகையிலே காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் காஞ்சிபுரம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் காஞ்சிபுரம் மாநகர மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் ஆகியோரது தலைமையில் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ் பங்கேற்று, கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிர் இழந்த தமிழர்களுக்காகவும், தமிழர்களின் உயிரை பறித்த கையாலாகாத மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள்,மகளிர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கருப்பு உடை அணிந்துக்கொண்டும், கண்டன முழக்கங்களை எழுப்பியும்,கைகளில் தேமுதிக கட்சி கொடிகளை ஏந்திக் கொண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ