திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் உள்ள நெசவுத் தொழிலாளர்கள் 11 பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 10,000 நெசவுத் தொழில் செய்து வருபவர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 10 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர் இந்த நிலையில், இவர்கள் கடந்த 10 நாட்களாக நெசவுத்தொழில் நிறுத்தி கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நூல் வழங்கும் வியாபாரிகள் தரப்புக்கும் நெசவு தொழிலாளர்களுக்கும் பேச்சுவார்த்தை
போராட்டம் நடத்துபவர்களிடம் இரண்டு கட்டமாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை செய்தார். இதில், நூல் வழங்கும் வியாபாரிகள் தரப்புக்கும் நெசவு தொழிலாளர்களுக்கும் பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. எனினும், இரண்டு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவுற்று இருந்தது.
பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது கட்ட பேச்சு வார்த்தை
தற்பொழுது மூன்றாவது கட்ட பேச்சு வார்த்தையாக பிப்ரவரி 22ஆம் தேதி இன்று வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் தொழிலாளர் நல ஆணையத்தை சேர்ந்தவர்களும் காவல்துறை அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அறிஞர் அண்ணா நெசவாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்
இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் சென்னை மண்ணடி சேர்ந்த வியாபாரிகள் தரப்புக்கும், கூலி உயர்வு கேட்டு போராட்டம் செய்து வரும் அறிஞர் அண்ணா நெசவாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் முழு பயண திட்டம்.! எங்கு செல்கிறார்?
தோல்வியில் முடிந்த கூலி உயர்வு பேச்சுவார்த்தை
இதில் சென்னை மண்ணடி பெரிய வியாபாரிகள் ரூபாய் ஐந்து ரூபாய் மட்டுமே கூலி உயர்வு உயர்த்தி தர முடியும் என்று கூறியதால், நெசவுத் தொழிலாளர்கள் ரூபாய் ஏழு ரூபாய் வரை கூலி உயர்வு வேண்டும் எனவும், நாங்கள் பத்து ரூபாய் கூலி உயர்வு கேட்டு 10 ஆண்டு காலமாக போராட்டத்தை முன்னிறுத்தி வருகிறோம். ஆகையால் எங்களது கூலி உயர்வு ஏழு ரூபாய் தரப்பிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்று கூறி பேச்சுவார்த்தை கூட்டத்தை விட்டு வெளியேறியதால் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
தமிழக அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்த போராட்டக்காரர்கள்
இதனை அடுத்து நெசவு தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் -ஆண்கள் 800 பேர் கூலி உயர்வு வேண்டுமென்று தமிழக அரசு தலையிட வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
தொடர் காத்திருப்பு போராட்டமும் மேற்கொள்வோம் என்று இவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்துள்ளதால் அதிகாரிகள் அனைவரும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே அமர்ந்து உள்ளனர் இதன் காரணமாக இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நெசவு தொழிலாளர்கள் பெண்கள் ஆண்கள் 800 பேர் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | த்ரிஷா - கூவத்தூர் சர்ச்சை... ஏவி ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ