திமுக கூட்டணியில் அடுத்த தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியானது.மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆறிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
திமுக வேட்பாளர் கள் பட்டியல் வரும் 10-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் ஆறாம் தேதியன்று தமிழகத்தில் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
MDMK has joined hands with DMK. The talks went well. DMK president MK Stalin has signed an agreement in which 6 Assembly constituencies have been allotted to MDMK: MDMK Chief Vaiko #TamilNadu pic.twitter.com/NS4TcnbjMG
— ANI (@ANI) March 6, 2021
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக உடனான தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்தது.
அதனால், மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ, நிர்வாகிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
Also Read | தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?
தற்போது, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் "மார்ச் 7 இல் லட்சியப் பிரகடனம் வெளியீடப்படும்; மார்ச் 10-ல் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மார்ச் 11ஆம் தேதியன்று தேர்தல் களத்தின் கதாநாயகனான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதன்பின் பரப்புரைப் பயணம் எனப் புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய பொறுப்பிலே இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read | DMK கூட்டணியில் CPIக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஒப்பந்தம் இறுதியானது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR