Original Lady Superstar Of Tamil Cinema : தமிழ் திரையுலகில், கடந்த 10 ஆண்டுகளாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அறியப்படுபவர், நயன்தாரா. ஆனால், இவருக்கு முன்னரும் ஒரு நடிகை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார். அவர் யார் தெரியுமா?
Original Lady Superstar Of Tamil Cinema : கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய அளவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார் நயன்தாரா. கிட்டத்தட்ட 19 வருடங்களாக திரையுலகில் நாயகியாக வலம் வரும் இவர், முழுமையாக இந்த பட்டத்திற்கு தகுதியானவர்தான். ஆனால், இவருக்கு முன்னர் ஒரு பழைய நடிகை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டிருக்கிறார். இவரும் பல ஆக்ஷன் படங்களில் நடித்து ஹீரோக்களுக்கு இணையாக சண்டை போட்டவர். அவர் யார் தெரியுமா?
நாயகியாக நடித்து வரும் பெரும்பாலான நடிகைகள், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அம்மா/அக்கா ரோல்கள் கொடுக்கப்பட்டு ஓரம் கட்டப்படுகின்றனர். ஆனால், நடிகை நயன்தாரா, 40 வயதிற்கு மேல் ஆன போதிலும் இன்றளவும் நாயகியாக மட்டுமே அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒரு பக்கம் காதல் அல்லது கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், இன்னொரு பக்கம் பெண்களுக்கு அல்லது நாயகிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடித்து வருகிறார்.
நயன்தாரா, இத்தனை ஆண்டுகளாக திரையுலகில் தைரியமாக காலூன்றி இருப்பதை பாராட்டும் வகையில், இவரை பலர் லேடி சூப்பர் ஸ்டார் என குறிப்பிடுவதுண்டு. இவர் நடிக்கும் படங்களில் இவருக்கென்று இப்படியொரு டைட்டில் கார்டும் இருக்கும்.
ஆனால் உண்மையில் தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட முதல் நடிகை இவர் கிடையாது. வேறு யார் தெரியுமா?
தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ஒருவருக்கு டைட்டில் கார்ட் போடப்பட்டது, விஜயசாந்திக்குதான்.
விஜயசாந்தி, பெரும் புகழை அடைய காரணம் அவர் நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படமும் ஒரு காரணம். இந்த படத்திற்கு பிறகு அவர் பலவித தைரியமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
இப்போது அரசியலில் ஆக்டிவாக இருக்கும் இவரை, இன்றளவும் பலர் ஒரிஜினல் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறிப்பிட்டு வருகின்றனர்.