அச்சு அசல் அஜித்தின் ஜெராக்ஸாக இருக்கும் அவரது தம்பி! வைரல் புகைப்படங்கள்..

Ajith Kumar Brother Anil Kumar : பிரபல நடிகர் அஜித் குமாருக்கு அனில் குமார் என்ற தம்பி இருக்கிறார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar Brother Anil Kumar : கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், அஜித் குமார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நேரத்தை தவிர பிற நேரங்களில் செல்போனையும் கேமராவையும் தவிர்க்கும் நடிகர் இவர். இதனாலேயே இவர் குறித்த பல விஷயங்கள் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது. இது போலத்தான் இவருக்கு 2 சகோதரர்கள் இருப்பதும் யாருக்கும் பெரிதாக தெரியாது. சமீபத்தில் அஜித்தின் தம்பி அனில் குமாரின் சில நேர்காணல்கள் இணையத்தில் வைரலானது. இப்போது இவரது சமீபத்திய புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

1 /7

தனது குடும்பத்தினருடன் பல மணி நேரம் செலவு செய்ய விரும்புபவர், அஜித் குமார். நடிகராக இருந்தாலும், தன்னை பற்றி மற்றும் தனது குடும்பத்தினர் குறித்த விஷயங்களை பிரைவேட்டாக வைத்துக்கொள்வார்.

2 /7

2000ஆம் ஆண்டில் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித்திற்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

3 /7

அஜித், பிறந்தநாட்கள், திருமண நாள், பிற பண்டிகைகள் என ஒரு முக்கிய நாளையும் தவறாமல் தனது குடும்பத்துடன் செலவிடுவார். அடிக்கடி, தன் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வார்.

4 /7

அஜித் குமாருக்கு இரு சகோதரர்கள் உள்ளனராம். ஒருவரின் பெயர் அனூப் குமார், இன்னொருவரின் பெயர் அனில் குமார். இதில், அனில் குமார் அஜித்தின் குட்டி தம்பி ஆவார்.

5 /7

அஜித் குமார் நடிகராகிவிட, அனில் குமார் சமூக நல ஆர்வலராக இருக்கிறார். இவர் நாய்களை பாதுகாக்கும் சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

6 /7

அனில் குமார், அவ்வப்போது சில நேர்காணல்களில் கலந்து கொள்வது வழக்கம். அப்படி இவர் பேசுவதை பார்த்த பலர், இவாது குரல் அப்படியே அஜித் போல இருப்பதாக கூறி வருகின்றனர்.

7 /7

அனில் குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவரிடம் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நாய் பத்தி மட்டும் கேள்வி கேளுங்க” என்று கூறினார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.