கடவுளுக்குப் படைக்கப்படும் பொருட்கள் அனைத்தும் சுத்தமானதாக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின் எந்தவொரு பொருளையும் மீதி வைத்து கடவுளுக்குப் படைக்கக்கூடாது. எச்சில் படாதப் பொருள்களை மட்டுமே கடவுளுக்கு படையலாக வைக்க வேண்டும். அந்தவகையில் எத்தனையோ பழங்கள் இருந்தாலும் வாழைப்பழம் மட்டும் எதற்காகக் கடவுளுக்குச் சிறப்பாக வைத்து வழிபடுகின்றனர் என்பதைப் பார்க்கலாம்.
வாழைப்பழங்கள் மற்ற எல்லா பழங்களைப் போலவே இயற்கையிலிருந்து விளைகிறது. வாழைப்பழம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு மதிப்புமிக்க ஊட்டச்சத்தின் மூலப்பொருளாகும். வாழைப்பழங்கள் கடவுளுக்காக மட்டுமே படைக்கப்பட்டவை என்று சில கலாச்சாரங்களில் மத விழாக்கள் மற்றும் பிரசாதங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் தோன்றியது என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்குச் சிறப்பான காரணங்களை நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றன. இதுபற்றி விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
எந்த பழமாக இருந்தாலும் அதனைச் சாப்பிட்டுவிட்டுத் தூக்கி எறிந்துவிடுவர். தூக்கி எறியப்படும் பொருளிலிருந்து மீண்டும் முளைத்து பொருள் உருவாகும்.
ஆனால், வாழைப்பழத்தினை உரித்தாலோ அல்லது முழுமையாக வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.
நமது எச்சில் படாதப் பொருளான வாழைப்பழம், வாழை மரத்தின் வாழைக்கன்றிலிருந்து மட்டுமே வரும்.
மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட கொட்டை உள்ள பழங்கள் சாப்பிட்ட பின் தூர எறிந்தால் அதிலிருக்கும் கொட்டையானது விதையாக முளைத்துப் பொருளாக உருவாகிறது
ஆனால், வாழைப் பழத்தில் கொட்டை என்பது கிடையாது. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.
ஆகையால், பிறவி மோட்சம் கிடைக்கவே கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.
இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.