Budget 2025: சுகாதாரத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? பட்டியல் இதோ

Union Budget 2025: நோயாளிகளுக்கு பலன் அளித்து, மருத்துவ சிகிச்சைகளை எளிதாக்கி, விலைகளை குறைத்து, காப்பீட்டு வசதிகளை மேம்பத்தும் அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுகாதாரத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகளை இங்கே காணலாம்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2025, 10:45 AM IST
  • மருத்துவ உபகரணங்களுக்கான இறக்குமதி வரி.
  • நலத்திட்டங்களை வலுப்படுத்தும் அறிவிப்புகள்.
  • டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் கொள்கைகள்.
Budget 2025: சுகாதாரத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? பட்டியல் இதோ title=

Union Budget 2025: இன்று 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். பலதுறைகளின் பிரதிநிதிகள் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களில் தங்களது எதிர்பார்ப்புகளின் பட்டியலை அளித்துள்ளனர்.

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

நாட்டின் முக்கிய மற்றும் அத்தியாவசிய துறைகளில் சுகாதாரத் துறையும் ஒன்று. சுகாதாரம் மற்றும் மருந்துத் துறை வேகமாக முன்னேறி வருகிறது. இதில் ஆராய்ச்சி மற்றும் நோயறிதலை துரிதப்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகளுக்கு பலன் அளித்து, மருத்துவ சிகிச்சைகளை எளிதாக்கி, விலைகளை குறைத்து, காப்பீட்டு வசதிகளை மேம்பத்தும் அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுகாதாரத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகளை இங்கே காணலாம்.

Tax on Medical Equipments: மருத்துவ உபகரணங்களுக்கான இறக்குமதி வரி

நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ உபகரணங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க சுகாதாரத் துறை கோரியுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு ஆகும் செலவும், அதன் தாக்கமாக நோயாளிகளுக்கு ஆகும் செலவுகளும் குறையும். இதனுடன், மருத்துவ உபகரணங்களுக்கு 12% சீரான விகிதத்தில் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போது, ​​மருத்துவ உபகரணங்களுக்கான 5 முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி விகிதங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க்கது.

Welfare Schemes: நலத்திட்டங்களையும் வலுப்படுத்தும் அறிவிப்புகள்

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்சில், போஷன் 2.0 மற்றும் சாக்ஷம் அங்கன்வாடி போன்ற முக்கிய முயற்சிகளையும், ஜல் ஜீவன் மிஷன் போன்ற திட்டங்களையும் வலுப்படுத்தும் அறிவிப்புகள் வெளியாகும் என்று துறை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது அனைவருக்கும், குறிப்பாக இந்த திட்ட பயனாளிகளுக்கு பெரிய அளவில் பயனளிக்கும்.

Digital Infrastructure: டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் கொள்கைகள்

சுகாதாரத் துறை டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் கொள்கைகளையும் எதிர்பார்க்கிறது. இது நோயறிதலில், புதிய ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதற்காக, மேம்பட்ட தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொலைதூர மருத்துவம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நோயறிதலுக்கு அதிக பலத்தை அளிக்கும். AI உதவியுடன், நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் இமேஜிங் பகுப்பாய்விலும் உதவி கிடைக்கு.

PLI Schemes

உள்நாட்டு API உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதுடன், PLI திட்டங்களை விரிவுபடுத்துவதும் நாட்டில் மருந்துப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று சுகாதாரப் பராமரிப்புத் துறை நிபுணர்கள் நம்புகின்றனர். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், உலக அளவில் இந்தத் துறையில் இந்தியா வேகமாக வளரும் என்று நம்பப்படுகின்றது.

இது தவிர, கிராமப்புற சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கையும் உள்ளது. இந்தியாவில் சுமார் 70 சதவீத மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். பல பகுதிகளில் இன்னும் சுகாதார வசதிகள் இல்லாத நிலையும் உள்ளது. 38 சதவீத பகுதிகளில் மட்டுமே சுகாதார வசதிகள் உள்ளன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் தொலைதூர சுகாதார சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது.

மேலும் படிக்க | LPG சிலிண்டர் முதல் UPI பரிமாற்ற விதி வரை... 2025 பிப்ரவரி முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்

மேலும் படிக்க | Budget 2025: ஊதியக்குழு, டிஏ அரியர், யுபிஎஸ், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மாஸ் அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News